உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


அவர்னர்கள் என்று இழிவாய்
அழைக்கப்பட்ட பதினெட்டு
சாதியினர், தோளில் துண்டு
போடுவதற்கோ, காலணி
அணியவோ, ஓட்டு வீடுகளைக்
கட்டவோ, பெண்கள் தோளில்
மாராப்பு போடவோ, தடை
செய்யப்பட்ட காலத்தில்-
இவர்களுக்கு ‘குகையாளப்
பிறந்த என் குழந்தாய்
எழுந்திருடா’ என்று அத்தனை
பேருக்கும் தலைப்பாகை கட்டி
விட்டவர். ‘தாழக்கிடப் போரை
தற்காப்பதே தர்மம்’ என்று
முழங்கியவர். வள்ளலாருக்கு
முன்பே அன்புக் கொடி கண்டவர்.

ஆன்மீகப் போராளி
வைகுண்டசாமி

இந்தியா முழுவதும் 80
சதவீத மக்கள் தீண்டாமை,
தோன்றாமை, காணாமை
போன்ற சாதியத் தீமைகளில்
முடக்கப்பட்டிருந்த 18 ஆம்
நூற்றாண்டின் தொடக்க காலம்.
அண்ணல் அம்பேத்கார் பின்னர்
குறிப்பிட்டதுபோல், சாதியும் -
வர்க்கமும் ஒன்றான கொடுங்
காலம். இந்தக் கொடுமைகளின்
உச்சமாக விளங்கியது தென்
திருவாங்கூர் சமஸ்தானம். இந்த
உச்சத்தின் மையுமாக கெட்டுப்
போனது, இந்த சமஸ்தானத்தின்
ஒரு பகுதியாக இருந்த கன்னியா
குமரி. இந்தப் பகுதியில்
இரணியல் போன்ற இடங்களில்,
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட
மக்கள் தாய் வேறு, சேய்வேறாய்
அடிமைகளாக விற்கப்பட்டார்கள்.
நம்பூதிரி, நாயர்கள் போன்
றோர் சொக்கத்தங்கத்
திற்கு இணையான கவர்னர்
என்ற மேட்டுக்குடியாகவும்,
வைகுண்டரின் ‘அகிலத் திரட்டு
அம்மானை
’ குறிப்பிட்டதுபோல்,
சாணான், இடையன், வணிகன்,
துலுக்கப் பட்டர், தோல்
வணியன், சாதி வணிகன்,
பறையன், கம்மாளன், ஈழன்,
கருமறவன், பரவன், கவுண்டன்.