பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 பெரியவரும், தோழனும்

கேள்விகளும் அந்தக் காலத்திலேயே, என் மனதில் அவரை ஒரு அதிசயத் தலைவராகவே உருவங் கொள்ளச் செய்தது. பிறகு அவரை சென்னையில் சந்திக்கும் பேறு கிடைத்த போது, எனக்குக் கிடைத்த மகிழ்ச்சியை சொல்லால் வடிக்க இயலாது. நான் தாமரையில் பல கதைகள் எழுதியதன் மூலம் எம்.கே. அவர்களுக்கு என்னை நன்றாகத் தெரியும்.

பதறிப்போன எம்.கே. .....

இத்தகைய பின்னணியுடன், பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு, எழும்பூரில் உள்ள ஒரு கல்யாண மண்டபத்தில் தோழர் ஒருவரின் கல்யாண நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டோம். எம்.கே. அந்த திருமண நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். நான் வாழ்த்திப் பேசினேன். அப்போது இளைஞனாக இருந்த நான் வாழ்த்துரையின் போது பழைய தலைமுறை பயனற்றுப் போய் விட்டது என்றும், புதிய தலைமுறையால்தான் நாட்டிற்கு சுகத்தைக் கொண்டுவர முடியும் என்றும் குறிப்பிட்டேன். இறுதியில் பேசிய எம்.கே. அவர்கள், இதற்குப் பதிலளிக்கும் வகையில், என் படைப்புக்களை பலவாறு பாராட்டிவிட்டு, நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்ததுடன், நாட்டைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கும் பழைய தலைமுறையினரை சமுத்திரம் இப்படி பேசலாகாது என்று மிகமிக இனிமையாக தெரிவித்தார். இந்த அர்த்தத்தில் அவர் சொன்னாரே தவிர, அந்த பதில் இனிமையாகவும், ஆணித்தரமாகவும், என்னைத் திருத்துவது மாதிரியும் இருந்தது.

துடித்துப்போன நான்.....

நான் துடிதுடித்துப் போனேன். எம்.கே. அவர்கள் நாட்டின் விடுதலைக்கு ஆற்றிய பணியையும், ஒரு நாளில் இருபத்துநான்கு மணி நேரமும், நாட்டு மக்களைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருப்பதும் நான் அறிந்ததே. அப்படிப்பட்ட ஒரு உன்னத தலைவனின் மனதை புண்படுத்தி விட்டோமோ என்று கிட்டத்தட்ட அழும் நிலைக்கே வந்துவிட்டேன். திருமண நிகழ்ச்சிக்குப் பிறகு அவரிடம் என் பேச்சுக்கு விளக்கம் அளித்து, பழைய தலைமுறையினரின் தியாகத்தை குறிப்பாக எம்.கே. அவர்களின் தியாகத்தைநான் போற்றிப் பாதுகாப்பேன் gl .ெ சா ன் னது ட ன் , அ வரி 1 ம் ம ன் னி ப் பு ம் கேட்டுக்கொண்டேன். அவரும் ஒரு தந்தைக்குரிய கனிவுடன் என் முதுகைத் தட்டிக் கொடுத்தார்