பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 95

இதற்குப் பிறகு, எம்.கே. அவர்களுடன், ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பேறு எனக்குக் கிடைத்தது. அ வர் எ ன் ைன ப் பார்த்து ஒரு பு ன் முறு வ ைல த் தோற்றுவிக்கும்போதெல்லாம் நான் சொக்கிப் போவேன்.

சர்வதேச பிரச்சினையும்-சொந்த பிரச்சினையும்.

நான் சென்னை தொலைக்காட்சியில் பணியாற்றியபோது எனக்கு ஒரு பெரிய சிக்கல் ஏற்பட்டது. அரசு பணியில் நியாயப் போராட்டம் தொடுத்த எனக்கு, அதன் விளைவாக பல்வேறு பிரச்சினைகள் சொந்த வாழ்விலும் ஏற்பட்டன. இதற்கு எம்.கே. அவர்களின் ஆலோசனையையும், உதவியையும் பெறலாம் என்று ஒரு எண்ணம் ஏற்பட்டது. எனது இனிய நண்பரும், பாட்டாளிக் கவிஞருமான திரு. கே. சி. எஸ். அருணாசலம் அவர் க ளு டன் , தி ரு எம்.கே. - ைவ , தியாகராயநகரில் அவர் வசித்த தோழர் வீட்டில் சென்று பார்த்தேன்.

எனது பிரச்சினைகளை அவரிடம் சொன்னேன். அவர் உடனடியாக உதவி வழங்குவதாகக் கூறினார். பிறகு எனது பிரச்சினை, சர்வதேசப் பிரச்சினையுடனும் சம்பந்தப் பட்டிருக்கிறது என்று முன்னுரை கூறிவிட்டு, அதற்கு விளக்கமளித்தார். அந்த விளக்கத்தால் இன்னும் நான் ஒரு சிறந்த எழுத்தாளனாக வராமல் இருக்கிறேன் என்றால், அது என்னுடைய குற்றம்தான். பாரதம், தனது சமதர்ம இலக்கை நோக்கிச் செல்வதற்கு இடையூறாக மேல்நாட்டு சக்திகள், வர்த்தகக் கலாச்சாரத்தை நமது நாட்டில் உருவாக்கி, வியாபார நடத்தையை அறிமுகம் செய்து விட்டதால், என்னைப் போன்றவர்கள் அதற்கு அரவானாய் ஆக்கப்படுகிறார்கள் என்றார்.

சொந்தப் பிரச்சினைகளில், சோர்வு கொள்ளாமல், சர்வதேச ரீதியில் நிலவும் சமதர்ம எதிர்ப்புச் சக்திகளுக்கு எதிராக எனது பேனாவைத் திருப்ப வேண்டும் என்றார் இப்படி கொள்கையளவில் பேசிவிட்டு, அவர் கம்மாவும் இருக்கவில்லை. எனது பிரச்சினைகளையும் தீர்த்து வைத்தார். அவர் எனது பிரச்சினையை இப்படி வேறு முறையில் ஆக்கியபோது நான் புல்லரித்துப் போனேன். அவர் காலைத் தொட்டு வணங்கி, எனது பேனாவை அவரிடம் கொடுத்து அதை எனக்குத் திருப்பித் தரும்படி வேண்டிக் கொண்டேன். அவரும் சிறிது நேரம் என்னையும், அந்தப் பேனாவையும் மாறிமாறி உணர்ச்சித் ததும்ப பார்த்துவிட்டு, பின்னர் அதை என்னி. ம் நீட்டினார்