பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 99

எடுத்துப் போடறதுக்குப் பொறுமை இருக்காது. ஆனா, அங்க வாழக்காய் விக்கிறவன் உக்காந்திருப்பான் சார். அவன் எழுந்து உள்ளேருந்து காசை எடுத்துக் குடுப்பான் சார். படிக்காத அவரு பெரியவரா, படிச்ச நான் uெரியவனா?

சமுத்திரம்: டால் ஸ்டாய் சொன்னாரு அனுபவம் முக்கியமில்லே. அனுபவத்திலேருந்து பெறக்கூடிய படிப்பினையே முக்கியம் ன்னாரு அனுபவம்.கிறது ஜன்னல். அந்த ஜன்னல் வழியா தெருவைப் பாக்கனுமே தவிர, ஜன்னலே தெருவாகாது. இல்லியா. இப்போ நீங்க சொன்னது ஒருவிதத்தில் சரிதான். மெத்தப் படிச்சவன் சுத்தப் பைத்தியக்காரம்பாங்க. சமீபத்தில் பேராசிரியர் அன்பழகன் பேசினாராம். பெரியார் அதிகமாப் படிக்கலே. அதுனாலேதான் அதிகமா சிந்திச்சார்'ன்னு. சரி, நீங்க சொன்ன ரயில்லே, உங்க இடத்தில் நான் இருந்திருந்தா, அந்த வாழக்காய் விக்கிறவன் உக்காந்திருந்த தோற்றம், அவன் எழுந்து வேட்டிய தூக்கின விதம், அதிலேருந்து ரூபாய எடுக்கிறது, அதை ஒரு கதையில சொல்லியிருப்பேன். என் வருத்தம் என்னன்னா நீங்க அதையே கொஞ்சம் செக்ஸ் கலந்து, அந்த வாழக்காய் காரனை ஒரு பொண்ணா மாத்தி, அவ ஜாக் கெட்டு லேயிருந்து காசை எடுத்துக் குடுத்தான்னு சொன்னாலும், அதுலே மனிதாபிமானம் இருக்கு. இதை ஏன் நீங்க எழுதாம விட்டீங்க?

புஷ்பா: நான் என்ன சொல்றேன்னா, நீங்க அப்படி எழுதிட்டா மட்டும் படிக்கிறவன் உடனே மாறிட மாட்டான். இப்போ வரதட்சனையைப் பத்தி இந்திலே ஒரு சினிமா வந்திருக்கு. உருக்கமா எடுத்திருக்கான். கண்ணுலே தண்ணிர் வந்திடும். ஆனா அதைப் பாத்து எத்தனை பேர் மாறிட்டாங்க? ஒன்னும் பிரயோஜனமில்லே. எனக்கு 15 வயகலே படிஞ்சதுதான் மனசுலே உறைஞ்சு நிக்குது. நம்மளை விடுங்க. அமெரிக்காவில நம்மவிட படிக்கிறவங்க அதிகம். அங்க சிறந்த - மிகச் சிறந்த நாவல்களைக்கூட, முதல் நாலுபக்கம் படிச்சவங்க எத்தனை பேரு, பாதி வரைக்கும் வந்தவங்க எத்தனை பேரு, முழுப் புத்தகத்தையம் படிச்சவங்க எத்தனைபேருன்னு கணக்குப் பாத்தா, முழுசும் படிச்சவங்க ரொம்பக் குறைவு சார், அமெரிக்காவிலேயே அப்படின்னா, ரொம்ப ரொம்பக் குறைவான ஆளுங்க மட்டுமே படிக்கிற நம்ம தமிழ் நாட்டில, எழுதி எழுதி கோடிக்கணக்கான மக்களையும் திருத்தப் போறோமகிறது லேசான விஷயமில்லே.

சமுத்திரம்: புஷ்பா, சமூக வளர்ச்சிங்கிறது, ஒரு பரிணாம வளர்ச்சி. ஒரு புரட்சிப் படைக்குப் பின்னாலே ஒரு கலாச்சாரப்