பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 காரச் சுவையான கலந்துரையாடல்

படை வேணும். ஆயிரம் பேரு தான் படிக்கிறான். கோடிக்கணக்கானவங்களை எப்படி எழுத்து போய்ச் சேரும்னு கேக்கறிங்க. பெரியார் நடத்தின குடியரசு பத்திரிகை ஏற்படுத்தின தாக்கத்தை, பெரிய பத்திரிகை எதுவும் ஏற்படுத்தல. நேரடியா மக்களை நீங்க தொட முடியலேன்னாலும், மக்கள்கிட்ட வேலை பாக்கிற தன்னலமற்ற தொண்டர்கள்கிட்ட உங்க எழுத்து போனர்லே போதும். அவன் அதை மக்கள்கிட்ட எடுத்துக்கிட்டுப் போவான். ஹிட்லர் சொன்னான் - அவன் மோசமானவன் - ஆனா அவன் அருமையா சொன்னான் - சரித்திரம் வென்றவர்களால் எழுதப்படுகிறது'ன்னான். நான் ஏதாவது துன்பத்தைச் சந்திக்கும்போது “நாமார்க்கும் குடியல்லோம், நமன்ை அஞ்சோம்” அப்பிடின்னு என் பாட்டன் எழுதுனது தான் ஞாபகம் வருது. எப்பவும் இந்த வார்த்தை என் மனசுலே ஒலி ச்சுகிட்டிருக்கு. அப்புறம் லியோ டால்ஸ்டாய், போலீஸ் அட்டகாசத்தைப் பத்தி எழுதியிருக்கிற புத்துயிர்ப்பு நாவலை மறக்க முடியுமா?

புஷ்பா இலக்கியத்தை, சமூக மாற்றத்துக்கர்ன காரணங்களில் ஒன்னுன்னு வேணும்னா சொல்லலாம். ஒரே காரணம்னு சொல்ல முடியாது. உலகம், 1930-40 வரைக்கும் ரொம்ப மெதுவாத்தான் நகர்ந்தது. மாற்றங்களே இல்லை. சயின்ஸ் வந்தப்புறம் ரொம்ப வேகம். பென்சிலின் எல்லாம் கண்டுபிடிச்ச பிறகு அது வாழ்க்கை முறை, சிந்தனை எல்லாத்தையும் மாத்திடுச்சு. விஞ்ஞானத்துக்கு முன்னால இலக்கியம் பயனற்றுப் போச்சே.

சமுத்திரம். நீங்க சொல்றது மாதிரி என்னதான் விஞ்ஞானம் வந்தாலும், அடிப்படை மனிதன் இருக்கானே அவனோட உணர்வுகள், சமூகப் பங்கீடுகள், விஞ்ஞானத்தைக் கூட விஞ்ஞான த்தை அதன் விளைவுகளை எப்படிப் பகிர்ந்தளிக்கிறது எல்லாத்துக்கும் இலக்கியம் வேணுமே. இப்போ, கிராமத்தில் ஒரு பெரியவரு ஒரு ஆட்டை ஒரு கிடா கிட்டே சேர்றதுக்கு விடறாரு நான் புது ஆளா அங்க நின்னா அது வெக்கப்படுது. நான் அந்தப் பக்கம் போனப்புறம், அது ரெண்டும் லவ் பண்ணுது. ஆட்டுக்கு இருக்கிற வெக்கம்கூட நம்ம ஊரு சினிமாக் காரனுக்கும் இல்லே. சினிமாக்காரிக்கும் இல்லே. இந்தக் காலக்கட்டத்தில ஒரு வைராக்கியம், ஒரு மான உணர்வு இதுக் கெல்லாம் இலக்கியம் தேவைப்படுது. பிரெஞ்சுப் புரட்சிகூட, வால்டேர், ரூசா எழுதின இலக்கியத்தாலேதானே வெடிச்சது.

புஷ்பா: அப்படியில்லே. ஒரு சமூகம் புரட்சிக்குத் தயாரா இருந்த காலத்தில வால்டேரும், ரூசோவும் எழுதினாங்க. எந்த