பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 ஆன்மீகப் போராளி வைகுண்டசாமி

சக்கிலியர் முதலிய பதினெட்டு சாதிகள் அவர்னர்கள் என்றும் அட்டவணைப் படுத்தப்பட்டிருந்தது.

இந்த இரண்டாவது வகை மக்களான அவர்னர்கள், இடுப்புக்குக் கீழே துணி உடுத்தவோ, காலணி அணியவோ, ஒ( வேய்ந்த வீடுகளைக் கட்டவோ, குடை பிடிக்கவோ கூடாது. பள்ளிகளிலும், நீதி மன்றங்களிலும், ஆலயங்களிலும் இவர்களுக்கு முழு அடைப்பு. இவர்கள் பசுமாடு வளர்க்க லாகாது. சுவர்னர்களும், அரசாங் கமும் ஏ வும் எந்த வேலையையும் கூலி இல்லாமலே செய்து முடிக்க வேண்டும். மேட்டுக் குடியினரிடம் தூங்கப் போகிறேன்’ என்று சொல்லக் கூடாது. தரையில் விழப்போகிறேன் என்றே சொல்ல வேண்டும். இந்தக் கொடுமைகளுக்கும் கொடுமையாக இவர்களது பெண்கள் இடுப்புக்கு மேலே எந்த ஆடையும் அணியலாகாது. இடுப்பிலோ செப்புக்குடம் ஏந்தலாகாது. எந்த நகையும் அணியக் கூடாது. இவை போதாது என்று இவர்கள் தாலிக்கு வரி, கையிலுள்ள தடிக்கு வரி, அரிவாளுக்கு வரி, தலைவரி, தாவர வரி, பெண்கள் மார்பகம் துளிர்த்தால் அதற்கும் வரி என்று வரிவரியாக வதைக்கப்பட்டார்கள். இந்த விதிகளை மீறுகிற ஒரு அவர்னரை, எந்த சுவர்னரும் வெட்டிக் கொல்லலாம்.

இத்தகையக் காலக் கட்டத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, பனையேறித் தொழிலாளியாய் வாழ்க்கையைத் துவக்கிய ஒரு ஆன்மீகப் போராளி கவர்னர்களான இந்தப் பதினெட்டு சாதி மக்களின் ஆண்களுக்கு தலைப்பாகை கட்டி விடுகிறார். பெண்களை தோள் சீலை அணியச் சொல்கிறார். இவர்களிடம் சாதி என்பது கொடிப்பாம்பு என்றும், எல்லோர்க்கும் கொடிப்பாம்பு இருக்கு தப்பா சத்ருவாய்... முச்சந்திக்குள் இருந்த பாம்பு உச்சம் பெற்று வருகுதய்யா...’ என்று அப்போதே எச்சரிக்கிறார். அனைத்து சாதி மக்களையும் தம் மக்கள் என்கிறார். கூனிக் குறுகிக் கிடந்த இந்த மக்களை குகையாளப் பிறந்த என் குழந்தாய்! எழுந்திரிடா!’ என்கிறார். அவனவன் செய்த முதலை அவனவன் வைக்க வேண்டும் - அதாவது சமஸ்தானத்துக்கு வரி கொடுக்கலாகாது என்று சூளுரைக்கிறார். கும்பினி ஆட்சிக்கார வெள்ளையர்களை வெண் நீசன் என்றும், திருவாங்கூர் மன்னனை ‘கலிநீசன் - அனந்த நீசன் என்றும் பிரகடணப்படுத்துகிறார். தாழக் கிடப்போரை தற்காப்பாதே தர்மம் என்றும் முழங்குகிறார். தன்னைச் சுற்றி அத்தனை அவர்ன சாதிகளையும் ஈர்க்கிறார். இவர்தான், வைகுண்ட சாமி என்று பின்னரும், முத்துக்குட்டி சாமி என்று முன்னரும் அழைக்கப்பட்ட மெய்யான வீரத் துறவி. இப்படிப்பட்ட போராளியைப் பற்றி எத்தனைப் பேருக்குத் தெரியும்? இதனால் இழப்பு. அவருக்கா, இந்த சமுதாயத்திற்கா?