பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 101

சமூகம் புரட்சிக்கு தயாரா இருக்கோ, அப்போ அந்த சமூகத்தில நாமும் எழுதலாம். பயனிருக்கும்.

சமுத்திரம்: அப்போ, இலக்கியத்துக்குப் பயனிருக்கு.

புஷ்பா. ஆனா அதுதான் ஒரே காரணம்னு சொல்ல முடியாது.

சமுத்திரம்: புஷ்பா, இலக்கியத்துக்கு ஒரு தொலைநோக்கு உண்டு. கார்க்கி எழுதுன தாய் நாவல்லே, கிராமத்துலே இருக்கிற தொழிலாளி மாஸ்கோவுக்குப் போவான். ஆனா, மாஸ்கோவில இருக்கிற படிச்ச தொழிலாளி இவனை எளக்காரமா பார்ப்பான். அப்பவே, சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு விதை ஊன்றப்படுவதை கார்க்கி எவ்வளவு சூசகமா, தொலைநோக்கோட சொல்லியிருக்கார் பாருங்க. அப்புறம், இலக்கியம்கிறது ஒரு காலப்பதிவு. இப்போ நம்ம காலத்துத் தமிழர்கள் சினிமாவுக்கு இரையாப் போயிட்டானேங்கிற வருத்தத்தை நான் ஒரு கதையில் பதிவு செய்திருக்கேன்.

புஷ்பா ஏங்க... அவனுக்கு வேற வழியில்லே. பொழுது போக்கில்லே, சினிமாவுக்குப் போறான்.

சமுத்திரம்: கன்னடக்காரனுக்கு வேற வழியிருக்கு. ஆந்திராகாரனுக்கு இருக்கு. கேரளாக்காரனுக்கு இருக்கு இவனுக்கு மட்டும் இல்லியா?

புஷ்பா: மனித இனம் தானாகவே மாறிப்போயிக்கிட்டு இருக்கு. யாரோட தலையீடும் தேவையே இல்லை.

சமுத்திரம்: அந்த மாற்றத்துக்கு இலக்கியம் உதவுது.

புஷ்பா: பெரிசா ஒன்னும் உதவலை, சாதாரண மனிதனுக்கு, நேத்து ரேஷன்லே அரிசி போட்டான். இன்னிக்குப் போடலை, இப்படிப் பொருளாதாரக் காரணம் தான் பெரிசா தெரியும். 1967ல் தி.மு.க. வரும்னு ஒரு பத்திரிகையும் எழுதலே. பத்திரிகைகள், இலக்கியம் எல்லாம் ஒரு கருத்தையும் உருவாக்க முடியாது.

சமுத்திரம் ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர் என்கிட்ட சொல்றாரு - “எனக்கும் ஆட்சியில சலனங்கள், சபலங்கள் வரது உண்டு. ஆனா உங்க எழுத்துக்களை நினைச்சுக்கிட்டு, நான் உடனே சரி பண்ணிக்குவேன்’ அப்படிங்கிறாரு என் எழுத்துன்னா அது நான் மட்டுமில்லே, எனக்கு புதுமைப்பித்தன், அழகிரிசாமி, விந்தன் சொல்லிக் குடுத்தாங்க மக்கள்