பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 காரச் சுவையான கலந்துரையாடல்

சொல்லிக் குடுத்தாங்க. நான் வாழக் கூடிய சமூகம் சொல்லிக் குடுத்துச்சு.

புஷ்பா: ஒருத்தரை மாத்தி உங்களுக்கு என்ன நடந்திடப் போவுது?

சமுத்திரம்: அவர் சாதாரண ஒருத்தரல்ல. சாதாரணமான லட்சக்கணக்கான மக்களின் மீது நடைபெறும் போலீசின. கொடுமைகளை, அராஜகங்களை தட்டிக் கேட்கும் நிலையில் உள்ளவர்.

புஷ்பா. நீங்க என்னதான் கரடியா கத்தினாலும், பொதுமக்கள் எல்லோரும் சேர்ந்து ஒத்துக்கிற வரைக்கும் எதுவும் பயன்தராது. இப்போ நீங்க நூறுபேர் சேர்ந்து வரதட்சினை கூடாதுன்னு எழுதுனாலும், ஒரு பொண்ணு அவளா சுதந்திரமா இவன் இல்லைன்னாலும் இன்னொருத்தன கட்டிக்க முடியும்னு தைரியம் வந்தாத்தான் வரதட்சினையைப் போக்க முடியும்.

சமுத்திரம்: வரதட்சிணைப் பிரச்சினைங்கிறது, மேட்டுக்குடி தங்கள் பிரச்சினையை சமூகத்தின் மீது திணிக்கிறது. சாதாரண மக்களுக்கு வரதட்சினைப் பிரச்சினையே இல்ல. யாராவது இந்த வரதட்சிணைப் பிரச்சினையில பெண்களுக்கு சொத்துரிமை உண்டுங்கறத கேக்கறானா? சரி, இல்க்கியத்துனால எந்தப் பயனும் இல்லைன்னு சொல்ற நீங்க அப்புறம் எதுக்கு எழுதுறீங்க?

புஷ்பா சம்பாதிக்கறேன். பணம் கெடைக்குது. அதனால எழுதுறேன். கருத்துக்காக எழுதுன புதுமைப்பித்தன் பேரே இப்ப மங்கிகிட்டுதானே வருது.

சமுத்திரம்: அதெல்லாம் இல்ல. அந்தக் காலத்த அவர் பதிவு செய்தார். இப்ப நீங்க மேல போங்க.

புஷ்பா: அப்ப இலக்கியம்கறது ஒரு காலகட்டத்துக்கு மட்டும்தான் உதவும். அப்படிங்கிறீங்களா?

சமுத்திரம்: இல்ல. இலக்கியம்கறது ஒரு தொடர்ச்சி. இலக்கியக் கருத்துக்கள் நிரந்தரமில்ல. ஆனா இலக்கியம் நிரந்தரம். புஷ்பா: கடந்த பத்தாண்டுகள்ல நிக்கக்கூடிய இலக்கியம் எது?

சமுத்திரம்: நிறைய இருக்கு. பொன்னிலனின் தரிசனங்கள் ஒரு காலப்பதிவு.

புதிய

புஷ்பா: நான் அதப் படிக்கல இப்போ நானே படிக்காதபோது நம்ம நாட்டுல எத்தன ஜனங்க அதைப் படிச்சிருக்கப் போறாங்க.