பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 103

சமுத்திரம்: போராளிகள் படிக்கிறாங்க். புஷ்பா: அவங்க படிச்சிட்டுப் போகட்டும்.

சமுத்திரம் அவங்க படிச்சிட்டுப் போறதில்ல. அவங்க எதையாவது செய்வாங்க.

புஷ்பா: சார்... நான் ஸ்ரீவேணுகோபாலன்கிற பேர்ல அருமையான கதைகள் எழுதுனபோது 18 வருசத்துல ஏதோ பத்துப்பேர் வந்து பாராட்டிருக்காங்க. புஷ்பா தங்கதுரைன்னு எழுத ஆரம்பித்தற்கப்புறம் ஆறு வாரத்துல நான் பாப்புலரா யிட்டேன்.

சமுத்திரம்: இப்போ அந்தி மந்தாரை படம் பாரதிராஜா எடுத்திட்டிருக்காரே நீங்களும் பாத்தீங்கள்ல... அதுல வர்ற அந்த தியாகியவிட நீங்க என்ன பெருசா கஷ்டப்பட்டுட்டீங்க? எது க் கு சொல் ல வர் றே ன் னா அறிமுகம் கெடைக்கலேங்கறதுக்குக்கா ஸ்ரீவேணுகோபாலன் புஷ்பா தங்கதுரையா...

புஷ்பா. இருங்க. இருங்க. அப்ப எனக்கு முன்னோடிகள் ஜெயகாந்தனும், தி. ஜானகிராமனும். எப்பப் பார்த்தாலும் தி. ஜானகிராமன் ஒரு அடல்ட்ரிய எழுதறது கவனிச்சிருக்கேன். தி. ஜா.-வ ரசிக்கிறவங்க இதை மறைமுகமா ரசிக்கிறாங்கன்னு நான் புரிஞ்சிக்கிட்டேன்.

சமுத்திரம்; இத நான் உறுதியா ஏத்துக்கிறேன்.

புஷ்பா: அப்புறந்தான் நானும் இதப் புரிஞ்சிக்கிட்டு கொஞ்சம் செக்ஸ் கலந்து எழுத ஆரம்பிச்சேன். ஆகையினால நான் உங்களுக்கும்கூட சொல்றேன் அதுல ஒண்னும் தப்பில்ல. நல்ல கதை எழுதறதோட கொஞ்சம் பணமும் பண்ணத்தானே வேணும்.

சமுத்திரம்: நான் புஷ்பா தங்கதுரைய மாத்தணும்னு பாத்தா நீங்க என்னை மாத்த முயற்சிக்கிறீங்க. சரி அவுங்கவுங்க வழியில நாம நடந்தாலும், மனித நேயத்த, மனித மேம்பாட்ட நமக்கேத்த வகைகள்ல சொல்லணும்.

- “இனி”, மே 1996