பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

/

சில மனிதர்கள், சிறந்த கவிஞர்களாக இருப்பார்கள்; ஆனால், நல்ல மனிதர்களாக இருக்கமாட்டார்கள். சில கவிஞர்கள், நல்ல மனிதர் களாக இருப்பார்கள்; ஆனால் சிறந்த் கவிஞர்களாக இருக்கமாட்டார்கள். பாரதியோ இந்த இரண்டிலும் உச்சம்.

பாரதியின் கவிதைகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு பின்னணி நிகழ்ச்சி உண்டு. இதை முழுமையாக ஆய்வு

\


தரதி ரை மனிதன்

இது வரை பார தி யார் பாடல்களைப் படாதபாடு படுத்திக் கொண்டிருந்த நமது தமிழ் விற்பன்னர்களும், வியாபாரப் பத்திரிக்கைகளும், இப்போது பாரதியாரையே படாத பாடு

படுத்தத் துவங்கியிருக்கிறார்கள். பாரதி தனது கோட்டில் ஒட்டுப் போட்டுத் தைத்தது குடைத்

துணியா அல்லது மனைவியின் புடவைத் துணியா என்பது ஒரு பத்திரிக்கையின் ஆராய்ச்சி.

பாரதியை எல்லோரும் மகா கவி என்று ஒப்புக் கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான், கல்கி, பாரதி # {} &5 ff. க வி யில் ைல, என்ற விவாதத்தை வேண்டுமென்றே துவக்கினார் என்று ஒருவரின் மழுப்பல். ‘பாரதியார் என்னய்யா. பாரதியார்... நான் வளர்ந்து விட்டேன். ஆகையால், அவர் எனக்கு ‘சுப்பிரமணியக் கவிதான் என்ற பேராசிரியர் ஒருவரின் அடம். என் வீட்டை தேடிவரும் சிற்றிலக்கிய பத்திரிக்கை ஒன்று ‘பாரதி ஒரு நிலப்பிரபுத்துவ பிற்போக்கு கவிஞன் என்று சொல்லும் ஃபேஷன். இவற்றை எல்லாம், கேட்கும்போதும், பார்க்கும்போதும், இந்த பாரதி