பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 105

நூற்றாண்டு விழா சீக்கிரம் முடிவடைந்து விடக்கூடாதா என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.

தமிழறிந்த தண்டல்காரர்கள்

பார தி யாரை, இப் படி தமிழ் படித்தவ ரெல்லாம் தண்டல்காரர்களாகி கண்டபடி விமர்சிப்பது தமிழ் இலக்கியத்தில், இன்னும் தீர்க்கப்படாமல் வழி வழியாக வரும் ஒரு குறையையே எடுத்துக் காட்டுவதாக நினைக்கிறேன். தமிழ் இலக்கியத் திறனாய்வில் படைப்பாளிகளின் பின்னணியையும், அவற்றின் காலக்கட்டத்தையும், படைப்பாளியின் நிலையில், அந்தக் கட்டத்தில் நாம் இருந்திருந்தால் எப்படிச் செயல்பட்டிருப்போம் என்ற “பின் நோக்கும்” இல்லாததையே இது காட்டுகிறது. இந்த குறைதான் “தான் கள்ளி பிறரை நம்பாள்” என்பது மாதிரி பாரதி மேல் குற்றம் காண வைக்கிறது.

எடுத்துக்காட்டாக சொல்லப்போனால், குழந்தை அழுவதன் மூலம், பிறநாட்டு எதிரிகள், தன்நாட்டு வீரர்களை அடையாளம் கண்டு, கொன்று விடக்கூடாதே என்பதற்காக, பெற்ற குழந்தையையே கொன்ற தாய்க்கும், தீர்மானம் என்று வந்து விட்டால், என் பிள்ளையைக் கூட கொல்வேன்’ என்று வீறாப்பு பேசிய, ஷேக்ஸ்பியரின் “லேடி மேக்பெத்”துக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நம்மவர்களால் காண முடியாது. முன்னவள் செய்தது கொலை என்றாலும், அது தியாகம். பின்னவள் செய்தது கொலையல்ல என்றாலும் அது கொலையினும் கொடிய நெஞ்சத்தைக் காட்டுவது. இப்படிப் பட்ட தமிழ் இலக்கியச் சூழலில் பாரதியை, சரியாக அடையாளம் காட்ட வேண்டியது, நமது பொறுப்பாகிறது. பாரதியாரின் ஒவ்வொரு பாடலுக்கும் உரித்தான நிகழ்ச்சிகளையும் சமூகப் பின்தளத்தையும் ஆராய வேண்டும். இந்த முறைமைக்கும் காணிக்கையாக - நான் கேள்விப்பட்ட நிகழ்ச்சிகளை பகிர்ந்து கொள்கிறேன்.

கடையத்தில் கண்டனம்

பாரதியாரின் மனைவி செல்லம்மா பாரதி பிறந்த கடையத்தில், என் பள்ளியிறுதிப் படிப்பை முடித்தேன். பொதுவாக, பள்ளிப் பேச்சுப் போட்டிகளில் முதற் பரிசுகள் வாங்குபவன் நான், எஸ்.எஸ்.எல்.சி படிக்கும்போது, பாரதி நினைவாக நடந்த பேச்சுப் போட்டியில், எனக்குத்தான் முதற்பரிசு என்பது, மாணவர்கள் மத்தியில் முடிவான தீர்ப்பு. ஆனாலும் எனக்கு இரண்டாவது பரிசு கிடைத்தது. நான், பாரதியாரின் “சொல்லத் தகாத” பாடல்களை சொல்லி விட்டேன் என்பதுதான் காரணம். ஒருவேளை என்னை, திராவிட இயக்கத்துடன் இணைத்துப்