பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 பாரதி என்ற மனிதன்

பார்த்திருக்கலாம். 1956ஆம் ஆண்டு வாக்கில், பாரதி என்ற பனை மரத்தடியில், அவன் கவிதை நுங்கின் கவையைச் சொன்ன என் வார்த்தைகள் நடுவர்களுக்கு, கள்ளாக தெரிந்திருக்கலாம். ஆகையால், எனக்குக் கோபம் இல்லை. பரிசு என்பது ஒரு அங்கீகாரம். அந்த அங்கீகாரம் எனக்குத்தான் பரிசில்லாமல் கிடைத்தது என்பதால் - அதுவும் முதல் பரிசு வாங்கிய மாணவர் தோழனே ஒனக்குத்தாண்டா கிடைத்திருக்கணும் என்று பெருந்தன்மையாக சொல்லிவிட்டதால், எனக்கு வருத்தமும் இல்லை. ஆனால் விவகாரம், அதோடு முடியவில்லை. அதுவரை, என்னைச் செல்லப் பிள்ளையாக நடத்திய ஆசிரியர்கள், என்னை விரோதப் பிள்ளையாக நடத்தத் துவங்கினார்கள். நின்றால் குற்றம், எழுந்தால் குற்றம். தனிப்பட்ட முறையில், வகுப்புகள் முடிந்ததும், என்னிடம் நிமிடக் கணக்கில் பேசும் என் அபிமான ஆசிரியர்கள்கூட, என்னை விரோதி மாதிரி பார்த்தார்கள்.

எனக் கோ தர்ம சங்க டம். பிராமண எதிர்ப்பு மாணவர்களோடு ம் சேர முடியவில்லை. பிராம ண மாணவர்களுடனும் இணைய முடியவில்லை. பள்ளியில் இருந்து, நீக்கப்பட்டு விடக்கூடாதே என்பதற்காக, எனக்கு கொடுக்கப்பட்ட அத்தனை “பாராமுகங்களையும்” பார்த்து சகித்துக் கொண்டேன். என்றாலும், எனக்கு ஆசிரியர்கள்மீது கோபம் ஏற்படுவதற்குப் பதிலாக, பாரதி மீது பச்சாதாபம் ஏற்பட்டது. 1956-ஆம் ஆண்டில் பாரதியார் பாடல்களைப் பாடிய அதுவும் பூசி மழுப்பிப் பாடிய எனக்கே இந்தக் கதி என்றால், நான் சொன்னதை விட கடுமையான பாடல்களை பாடியது மட்டுமல்ல - யாத்ததுபோல் வாழ்ந்த பாரதியை என்ன பாடுபடுத்தியிருப்பார்கள்! பாரதியின் அந்த ஊர் நடமாட்டத்தை விசாரிக்கத் துவங்கினேன்.

விசித்திர பாரதி

நல்ல வேளையாக, பாரதியாரின் சமவயது கிழவர்கள், அப்போது வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு, பாரதி மீது துவேஷமோ அல்லது ஆவேசமான பக்தியோ கிடையாது. அவர்களைப் பொறுத்த அளவில் பாரதி ஒரு விசித்திரமான மனிதன். அவ்வளவுதான். நான், அந்த முதியவர்களை, மெல்ல அணுகியதும் கெர்ட்டிவிட்டார்கள். சுப்பிரமணியமா, செல்லம்மா ஆத்துக்காரனா. சரியான கிறுக்கன். கழுதைக் குட்டி வாலைப் பிடித்துக்கிட்டு. அது பின்னர்டியே, இந்த ஆறு பக்கமா ஒடுவான். இன்னொரு நாளைக்கு சேரில போய் வம்பளப்பான். அவங்க

கூட டீக்கடையில் ஒக்காருவான்.... ஒரு நாள். & L-6A) மாடசாமிகூட ஆடுறான். ஆனால் மனுஷாள்னா உயிரை விடுவான். இப்போ என்னடான்னா, அவனுக்கு...” இந்த

முதியவர்களின் தொனி, பாரதிக்கு, இத்தகைய கிறுக்குத்தனம்