பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 107

இல்லாதிருந்தால், இன்னும் அதிக பேர் புகழ் கி ைத்திருக்கும் என்பது மாதிரியும், அவனை ஒரு கெட்ட உதாரணமாக நினைத்து, ஆசாரப்படி வாழ்ந்த தங்கள் பெயர், தெருவிற்கு குறுக்கே கூட போகவில்லையே என்ற ஆதங்கம் ஒலிப்பது போலவும் தோன்றியது.

மறவன் பாட்டின் மர்மம்

பாரதியார், கடையத்தில் இருந்தபோது, பட்ட அவமானங்களும், ஏற்பட்ட வறுமையும் கெர்ஞ்ச நஞ்சமல்ல. பொதுவாக, தீவிரமாக வாழ்க்கையை துவக்கி, பிறகு வாழ்வால் குட்டுப்படுபவர்கள் இறுதியில் ராமா கோவிந்தா என்றோ அல்லது இயல்பான குழு உணர்வினால், சொந்த ஜாதியினருடனோ, சரண் புகுவது இயற்கை. பாரதி, அப்படிப் பட்டவன் அல்ல. கடையத்தில் வாழும்போது அல்லது வாடும் போது) பக்கத்துச் சேரிக்குப் போய், அந்த மக்களோடு, உரக்கப்பேசி, பலமாகச் சிரித்து வாழ்ந்தவன். ஒரு சமயம் சேரியில் சுடலை மாடனுக்கு கொடை, மேளத்தோடு, வில்லுப்பாட்டும் அமர்க்களப்பட்டது. பாரதியார், சாமியாடத் துவங்கி விட்டாராம். உடனே பக்தர்கள், அவர் கையில் தட்டைக் கொடுத்து கற்பூரத்தை ஏற்றி விட்டார்கள். நாணயங்களை காணிக்கையாகப் போட்டார்கள். உடனே பாரதி கேட்டானாம்.

“நான் கேட்கிறதை ஒங்களால் காணிக்கை கொடுக்க முடியுமா?”

“எது கேட்டாலும் கொடுக்கோம்.”

“முடியாது. நான் மூளையைக் கேட்பேன். உங்களால் தரமுடியுமா? கடவுள்தான் ஒங்களுக்கு அதைக் கொடுக்கலி யே...”

பக்தர்கள் துணுக்குற்றபோது, பாரதி கலகலவென்று சிரித்தானாம். ஒருவேளை, சாமியாடும் பாமரமக்களை, அவின் செல்லமாகக் கண்டித்திருக்கலாம். எப்படியோ. உயர் ஜாதியில் பிறந்தவன் ‘ஹரிசன சுடலைமாடனை ஆடியது கண்டு பொறுக்காதவர்கள் பாரதியை எள்ளி நகையாடினார்கள். செல்லம்மாவை இளக்காரமாகப் பார்த்தார்கள். விருந்து, கேளிக்கைகளுக்கு, சுப்பையா (பாரதியின் செல்லப்பெயர்) அழைக்கப்படவில்லை. மொத்தத்தில், தள்ளாமல் தள்ளி வைத்தார்கள். இந்தச் சமயத்தில் அவன் பாடியதுதான் “மறவன் பாட்டு.”