பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 1 11

எட்டடி என்றால் அவரது தாயார் அழகிய நாயகியம்மாளின் வீச்சோ பத்தடியாகியிருக்கிறது. இந்த அளவிற்கு படைப்பிலக்கியத்தில் தன் வரலாறாகவும், தன் வரலாற்றில் படைப்பு இலக்கியமாகவும், கவலை பல்வேறு இலக்கிய அதிர்வுகளை தோற்றுவிக்கின்றது. உள்ளதை உள்ளபடி எழுதுவதே இலக்கியம் என்பதற்கு கவலை, ஒரு இலக்கியமாகவும், இலக்கண மாகவும் ஒரேசமயத்தில் திகழ்கிறது.

தமிழ் இலக்கிய ஒளவையார்களைப் போல, இந்தப் படைப்பு சிறுமி அழகியநாயகி, கன்னிப்பெண் அழகியநாயகி, குடும்பத் தலைவி நாயகி அம்மாள், விதவை அழகியநாயகி, மாமியார் அழகியநாயகி என்று பல்வேறு அழகிய நாயகிகள் நடமாடுகிறார்கள். இப்போது லெட்டர் பாட் வைத்து நூற்றுக் கணக்கான வாசகர்களின் கடிதங்களுக்கு பதில் எழுதியும், தரமான ஓம்சக்தி பத்திரிகையில் தொடர் எழுதியும், புகழோடு விளங்கும் அழகிய நாயகி அம்மாள், ஒரு முதுபெரும் ஒளவையாய், பரிணமித்து நிற்கிறார்.

சிறுமி நாயகி

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஈத்தாமொழி என்ற கிராமத்தில், பாரம்பரியமிக்க குடும்பத்தில் இளையநாடானின் மகளாக பிறந்தவள் இந்த சிறுமி. முதலில் அண்ணனையும், கடைசியில் தங்கையையும் உடன்பிறப்புகளாகக் கொண்டவள். சின்ன வயதிலேயே தாயற்றுப்போனவள். பாட்டியோ, தனது ஒரே மகனை சாவுக்கு காவுக்கொடுத்துவிட்டு, அவனது சமாதியில் ஒட்டையிட்டு தலையை உள்ளே விட்டு ‘மகனே மகனே’ என்று அரற்றியதை பார்த்தவள் இந்தச் சிறுமி. இவளது ஒன்றுவிட்ட சகோதரனான கட்டநாடான், தனது மூன்றாவது தாரமான அகஸ்தீஸ்வர நாடாத்தியை ரத்தம் சொட்டச்சொட்ட அடித்து நொறுக்கியதையும், அவன் வீட்டுக்குள்ளேயே அந்தப் பாவிப்பெண் ஒராண்டுக்கு மேல் கண்ணில் படாமல் வாழ்ந்ததையும், இறுதியில் வீட்டுக்கு வெளியே தூக்கி எறியப்பட்டதையும், கண்நோயாய்க் கண்டவள் இந்தச் சிறுமி.

இந்த மயினியிடமிருந்து நாட்டுப்புறப்பாடல்களை கேட்டவள். பன்ை ஒலைகளில் இவளது கலை வேலைப்பாடுகளைக் கண்டவள். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த மயினிக்கு பக்கபலமாக நின்றவள். இந்தக் கட்ட நாடான் இறுதியில், சித்திரவதை செய்யப்படாத குறையாக செத்த போது, சொந்த ஊருக்கு விரட்டப்பட்ட, அகஸ்திஸ்வரிகாரியிடம் செய்தி போகிறது. உடனே அவள் எனக்கு அறுக்கத் தாலி கழுத்தில் இல்லை என்று சொல்லுகிறாள். இந்தப் பெண்ணடிமைக் கொடுரங்களை கண்டு இந்தச்சிறுமி அப்போது அழுது இருக்கிறாள். அதைச்சொல்லிச்சொல்லி இப்போது நம்மையும் அழவைக்கிறாள்.