பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 அவ்வையாரான அழகிய நாயகி அம்மாள்

ஏழு வரை படித்து விட் டு , இவரது தந்தை யின் அடாவடித்தனத்தால், மேற்கொண்டு படிக்கமுடியாமல் போனாலும், துகிலுரிதல், அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி மாலை, முத்துப்பட்டன் மாலை, ஆகிய நாட்டுப்புற கலை இலக்கிய நூல்களை படித்தவள். மலையாள மொழியிலும், ஒரளவு தேர்ச்சிப் பெற்றவள்.

இளம்பெண் அழகியநாயகி

இவள், தனது தந்தை இளையநாடானுக்கு இரண்டாம் தாரமாய் வந்த சின்னம்மாவை சொந்தத்தாயாக கருதியவள். இந்த நூலில், பெற்ற மகனும் கட்டிய கணவரும்கூட தாக்குதல்களில் இருந்து தப்பிக்க முடியாதபோது, மாற்றாந்தாயான இந்தச் சின்னம்மா, மாற்றுக்குறையாத பொன்னாக விளங்குகிறாள். இது அழகியநாயகி சிறுமி இளம்பெண்ணாக உருமாறினாலும், அவளது மனிதாபி மானமும் நேர்மையும் மாறவில்லை என்பதற்கு அத்தாட்சி. ஊரில் இருக்கிற சின்னஞ்சிறு குழந்தைகளை கூட்டி வைத்துப் பாடம் சொல்லி கொடுத்தவள். புத்தக வியாபாரி வரும்போதெல்லாம் சொந்தமாய் சேர்த்த சக்கரங்களை (காசுகள்) கொடுத்துப் புத்தகங்கள் வாங்கிப் படித்தவள். செல்லமாக ஒரு மைனாவை வளர்த்தவள். அந்த மைனா தனது தம்பியைப்பார்த்து ஏ ராஜா. வாடே என்று பேசும்போதும், கஞ்சி குடிச்சியா என்று இவளை கேட்கும்போதும் புளகாங்கிதப்பட்டவள். அதே மைனா ஒரு பூனைக்கு இரையானபோது தந்தையோடு சேர்ந்து ஒப்பாரி போட்டவள். ஆகமொத்தத்தில் சுற்று வட்டாரத்தில் அனைத்து சாதிப்பெண்களின் மதிப்பைப் பெற்றவள்.

குடும்பத் தலைவி

இப்படி மனிதாபிமானத்தோடும், நேர்மையுடனும் திகழ்ந்தவள் பொட்டலுரில், அம்ம்ம் கொண்டாடியார் குடும்பத்தில், காந்தியவாதியான ஆசிரியருக்கு வாழ்க்கைப்பட்டவள். தந்தை, தன்னை ஒரு சாதாரண குடும்பத்தில் தள்ளிவிட்டுவிட்டார் என்று தப்பாகவோ சரியாகவோ நினைத்தவள். ராமருக்கு லட்சுமணன் போல், அண்ணுக்கு தம்பியான, தனது கணவர், குடும்ப விவகாரங்களில் - குறிப்பாக அண்ணன் மனைவி பூமத்திவெளக்காரியின் அடாவடித்தனங்களை கண்டுக்காதவர் என்பதில் இவளுக்கு ஒரு குறை உண்டு. அதோடு அண்ணனிடமும், அவரின் சொக்கரனான கந்தசாமி என்னும் வம்பனிடமும், பேசக்கூடாது என்று கணவர் போட்ட கட்டளையை வெளியே சொல்ல முடியாமல் வெம்பியவள். கணவன் வீட்டிற்கு தாழ்ப்பாள் போட்டால், பழி இவளிடம் வந்து சேருகிறது. தலைப்பிரசவத்திற்கு கூட்டிப்போகும் தந்தை