பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 113

இளைய நாடானோ, இவளை வண்டியோடு வழியில் விட்டுவிட்டு, நீதிமன்றத்திற்கு இடையிலேயே பிய்த்துவிடுகிறார். குழந்தை பிறந்தபிறகு, தாயையும் சேயையும் சீரோடும் சிறப்போடும், அனுப்பாத குடும்பத்தால் குலைந்துபோனவள்.

இதுபோதாது என்று இவளுடைய மச்சான் மனைவியான பூமத்திவெளக்காரி பொதுச்சொத்துக்களைத் திருடி தம்பிக்கு கொடுக்கிறாள். இவளை ஊரில் எவ்வளவு கேவலமாக பேசமுடியுமோ, அவ்வளவு கேவலமாக பேசுகிறாள். ஒரு கட்டத்தில் இவளை அடிக்கிறாள். இவளோ இன்னும் காணாது இன்னும் அடி, என் தகப்பன்கிட்டே நீ பொண்ணு கேட்க வந்த அண்ணு, நீரு எங்களுக்கு ஒன்னுந்தரவேண்டாம். எங்களுக்கு சொத்து நிறைய இருக்கு எண்ணு. சொல்லி, தாலியக் கெட்டி ஒங்கையில புடிச்சி தந்து. ஒம்பிள்ளைய புடிச்சித் தந்திட்டேன், நீ கூட்டிக்கிட்டுப் போ எண்ணு தந்தானே. அந்த தோசமெல்லாம் இண்ணோடே தீரட்டும். அடி. என்ன வளர்த்து, நேச்சக்கிடா போல ஒனக்கு பெலி தந்தான் என் தகப்பன். நீ இண்ணும் நேசக்கடன திரு என்று கையறுநிலையில் பேசுகிறாள்.

வீட்டுக்குத் திரும்பிய கணவனிடம் சொன்னாலோ, அவர் “அந்த அடி சிறீராமர் அடிச்ச அடி, அந்த அடியில குத்தமில்லை” என்கிறார். இந்தப்புதிர் இன்றளவும் இந்த ஆசிரியருக்கோ நமக்கோ புரியவில்லை. இதனால்தான் கொண்டவன் துணையில்லாதவளுக்குக் கூரையளக்கும் துணை இல்லை என்ற பழமொழியை நினைத்துப் பார்க்கிறாள். ‘எனக்கும் ஏழையான கோழையை வகுத்தான் விதிகாரன் என்று வாசகர்களிடம் கூறுகிறாள். இவளது கோபம் இந்த நூலில் ஒரு பரபரப்பான விவகாரம். பெற்ற மகன் பொன்னிலனே இதை மறுத்து எழுதி இந்த நூலில் பிற்சேர்க்கையாக இணைத்திருக்கிறார். இதில் அப்பழுக்கற்ற தனது தந்தை அம்மாவின் துணி மணிகளை ஒடைக்குப்போய் துவைத்து வந்த துணிச்சலான காரியத்தையும் சுட்டிக்காட்டுகிறார். ஆனாலும், அழகிய நாயகி அம்மாளின் கோபம் அல்லது வருத்தம் நியாயமாகவே படுகிறது. அதே சமயம் இந்த அழகிய நாயகி தனது மகன் சிரமமில்லாது, மதுரையில் தனியார் பள்ளியில் இருந்து மீண்டு, அரசாங்க பள்ளியில் சேர்வதை இவர்கள்(கணவன்) செய்த புண்ணியம் என்கிறாள். பொட்டலூரில் உயர்நிலைப்பள்ளி வருவதற்காக சொத்தையும் பணத்தையும் கொடுத்தும் ஊராரால் உதாசீனம் செய்யப்பட்ட கணவருக்கும், அவரது அண்ணனுக்கும் ஒரு தார்மீக கோபத்தோடு நியாயம் கேட்கிறாள்.

விதவை

கல்யாண வயதில் நின்ற இரண்டு மகள்களும் இறந்துபோக, நடுத்தர வயதிலேயே கணவனை இழந்து தவிக்கிறாள் அழகியநாயகி. .a