பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 117

உள்ள இந்த மலைப் பகுதியில் பல கிராமங்கள் சிதறிக் கிடக்கின்றன.

கொத்தடிமை முறையில் இருந்து “மீட்கப்படுவது” வரைக்கும், இந்த மலைவாசிகள் மூன்று ஜாகிர்தார்களின் கட்டுப்பாட்டில் காட்டு தர்பாரில் இருந்தார்கள்.

இந்த நூற்றாண்டின் எழுபதுகளில், கல்வராயன் மலைக்குப் போகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது அரசு அதிகாரிகள் முகாம் போட்டிருந்தார்கள். இந்த மலைப்பகுதியில் மக்களை கொத்தடிமையில் இருந்து மீட்டு, தேனும் பாலையும் ஒட வைப்பதே இவர்களின் விருப்பம். நானும் எனது பதவி அடிப்படையில்தான் சென்றேன்.

அங்கிருந்து, இருபது கிலோ மீட்டர் தொலைவுவரை பல குக்கிராமங்களைப் பார்த்தேன். பொதுவாக, மலை ஜாதி என்றால், வில்அம்போடு, முரட்டுத்தனத்துடன் இருப்பார்கள் என்பதும், இவர்கள் தங்களின் பெண்டு பிள்ளைகள், பிறரால் பயன்படுத்தப்படுவதை அனுமதிப்பார்கள் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

இந்தக் கருத்தின் அடிப்படையில் பாரதம், முழுவதும் பல அப்பாவி மலைமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பெண்கள் சூறையாடப்பட்டிருக்கிறார்கள். கல்வராயன் மலை மக்களைப் பற்றியும் சமவெளிக்காரர்கள் இப்படித்தான் கருதுகிறார்கள். இது உண்மையா?

சூரிய இருட்டு

உண்மை மாதிரி. ஆனால் உண்மையல்ல. காட்டில் நடக்கும்போது, உடம்பில் முள் குத்தலாகாது என்பதற்காக, கோவணத்தைக் கட்டிக் கொண்டு, தலை முழுவதையும் வேட்டியால் மூடிக்கொள்ளும் இந்த மக்களைப் பார்த்ததும், சூரியனைப் பற்றிப் படித்த ஒரு விஞ்ஞானப் புத்தகம் எனக்கு நினைவுக்கு வந்தது. சூரியனின் அடிப்பாகம், சொல்ல முடியாத கருநிறத்தில் உள்ளதாம். இங்கே நினைத்துப்பார்க்க முடியாத உஷ்ணம் ஆட்சி செலுத்துகிறதாம். மற்றபகுதிகளை விட அளவற்ற உஷ்ணம் அளவற்ற இருட்டு. உஷ்ணம் அதிகமானதால், அதிகமாய்ப் போன இருட்டு. பொதுவாக, உஷ்ணத்தில் தான் ஒளி பிறக்கிறது என்று நினைத்திருந்தேன். இங்கேயோ மையிருட்டையும் ஒளிப்பிரளயமாய்க் காட்டும் இருட்டான இருட்டு.

இதற்கு அந்தப் புத்தகத்திலேயே விளக்கம் இருந்தது. அளவுக்கு மீறிய உஷ்ணம் ஒரு அளவில் இருக்க வேண்டுமாம். இதே மாதிரிதான் இந்த மக்களும். இவர்கள் கோழைகள்