பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 2 4 ஏட்டுச்சுரைக்காய் தீர்ப்புகள்

திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கும். ஆனாலும் இந்தத் தீர்ப்பை நிறைவேற்ற வேண்டியது வருவாய்த் துறை அதிகாரிகளின் பொறுப்பு. இவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது காவல்துறையினரின் பொறுப்பு. இந்த இரு துறைகளும் பெரும்புள்ளியின் பைக்குள் அடக்கம். சாக்குப் போக்குகள் சகலமும் சொல்லி தீர்ப்பு கிடப்பில் போடப்படும். அந்த ஏழைக்காக வழங்கப்பட்ட தீர்ப்பு ஊமைகண்ட கனவாகிவிடும். இந்த தீர்ப்பை அமுல் செய்யவில்லை என்று மீண்டும் நீதிமன்றம் செல்ல வேண்டுமானால், கோர்ட் அவமதிப்பு வழக்கு என்று பெரும்புள்ளியின் மீதும், அரசு அலுவலர்கள் மீதும் அதே ஏழை வழக்குப் போட வேண்டும். அதனால் அந்த ஏழைக்கு பகை இரட்டிப்பாகுமே தவிர, பலன் இருக்காது. அப்படியே இருந்தாலும், அந்த வெற்றி தோல்விக்குழியில் அடக்கமாகிவிடும். இதை வைத்துத்தான் சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழலாம் என்ற பழமொழி ஏற்பட்டிருக்க வேண்டும்.

மண்ணாகிப்போன தீர்ப்பு

ஆள்பலமோ, பணபலமோ இல்லாத ஒரு ஏழைக்குக் கிடைக்கும் நீதியின் லட்சணம் இதுதான். பலசமயம் நடுத்தர மக்களும் பாதிக்கப்படுவதுண்டு. எனக்குத் தெரிந்த வெளி மாநிலத்தில் பணியாற்றிய தமிழர் ஒருவர், வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி, சென்ன்ை நகரில் வீட்டுமனை வாங்கிப் போட்டார். பதவியிலி ருந்து ஒய்வுபெற்று திரும்பி வந்து பார்த்தால், அந்த மனையில், ஒரு தாதா சொகுசு பங்களா ஒன்றை கட்டியிருந்தார். இவர், காவல்துறையினரிடம் முறையிட்டார். காவல்துறையோ, ஒரு விசித்திரமான சட்டத்தை அவர் மீது ஒரு ஆயுதமாக எறிந்து தாதாவுக்கு கேடயமாக நின்றது. அதாவது,

சட்டவிதியும்-தலைவிதியும்

ஒரு உடமை யாருடைய பொறுப்பில் இருக்கிறதோ அந்த உடைமைக்குச் சேதம் வராமல் இருக்க, சம்பந்தப்பட்டவருக்கு காவல்துறை, பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்பது சட்ட விதியாம். தலைவிதியைக்கூட மாற்றலாம். சட்டவிதியை மாற்ற முடியுமா? இந்த விவகாரத்தில் அந்த அப்பாவி மனிதர் வாங்கிப்போட்ட நிலம், அந்த தாதாவின் பொறுப்பில் பங்களா முளைத்த இடமாகிவிட்டது. ஆகையால் காவல்துறையினர் அந்த வீட்டுக்கும், வீட்டுக்காரனுக்கும் பாதுகாப்பு கொடுப்போம் என்றார்கள். மனையை வாங்கிப் போட்டவர் வம்புதும்பு செய்தால் கைது செய்யப்படுவார் என்று எச்சரித்தார்கள். இந்த அப்பாவியோ நீதிமன்றத்திற்குப் போனார். ஓய்வு கால இறுதியில் கொடுக்கப்படும் பணத்தை