பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 125

வழக்கில் போட்டு, மனையைத் திரும்பிப் பெறுவதற்கான தீர்ப்பை பெற்றுவிட்டார். ஆனால், அந்த தாதாவோ, நிதியில் தீர்த்துவிட்டான். இதனால் இந்தத் தீர்ப்பை செயலாற்ற வேண்டிய அரசு இயந்திரத்திற்கு காதுகள் செவிடாகிவிட்டது. கண் குருடாகிவிட்டது. மீண்டும் கோர்ட் அவமதிப்பு வழக்குத்தான் போட வேண்டும். கையிலோ பணமில்லை. அந்தப் பாவப்பட்ட மனிதரோ மூன்று பிடி மண் எடுத்து தன் மனையில் கட்டிய வீட்டுக்கு முன்னால் வீசியடித்துவிட்டு, எந்த மாநிலத்தில் கவுரமாகவும் சுயமரியாதையாகவும் வேலை பார்த்தாரோ, அந்த மாநிலத்திற்கு சொத்திழந்து சுயமிழந்து விரக்தியோடு ஓடிவிட்டார்.

என் கண்ணில்பட்ட இன்னொரு நிகழ்ச்சி. நான் வாழும் பகுதியில் சுமார் நாற்பது கிரவுண்டு வீட்டுமனை, நீதிமன்ற தாவாவில் இப்போதும் உள்ளது. இந்த மனைகளில் எவரும் வீடுகட்டலாகாது என்று உயர்நீதிமன்றம் பத்தாண்டுகளுக்கு முன்பே இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்தத் தடைக்கு இன்னும் உயிர் இருப்பதாகக் கேள்வி. ஆனாலும் அத்தனை வீட்டு மனைகளிலும், பிளாட்டுகளிலும் சொகுசுப் பங்களாக்கள் தோன்றிவிட்டன. இன்றளவும், நீதிமன்றத்தைப் பொறுத்த அளவில் இந்த நாற்பது கிரவுண்டும் காலிமனைதான். நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான இத்தகைய சூட்சமங்கள் எப்படி நடைபெறுகிறது என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.

இரட்டை வேடங்கள்

பல ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட தீர்ப்புகள் செயல்படுத் தப்படாமல் இருப்பதை சுட்டிக் காட்டி, பாதிக்கப்பட்டவர்கள், மீண்டும் நீதிமன்றத்திற்குப் போன செய்திகள் பத்திரிகைகளில் விலாவாரியாக வந்துள்ளன. நாமும் படிக்கத்தான் செய்கிறோம். இனிமேலும் படிக்கத்தான் போகிறோம். ஆனாலும் நீதிமன்ற தீர்ப்புகள் செல்லாக் காசாய் ஆக்கப்படுவது குறித்து நம்முள் ஒரு தார்மீக கோபம் ஏற்படுவதில்லை. அதேநேரம் தீர்ப்பு, ஏழைகளுக்கு எதிராகவோ அல்லது அரசுக்கு ஆதரவாகவோ இருந்தால், அது உடனடியாகவும் தடாலடியாகவும் செயல்படுத்தப்படுகிறது.

ஆகமொத்தத்தில் நீண்ட நெடிய ஆண்டுகளை உள்ளடக்கிய கொடுரமான செலவு பிடித்த வாய்தா காலத்திற்குப் பிறகு, வாராது வந்த மாமணிபோல் நியாயமான தீர்ப்பு கிடைத்தாலும் அந்த தீர்ப்புகூட, ஏழை என்றால் எள்ளி நகையாடுகிறது. இதை செயலாக்க வேண்டிய அரசு இயந்திரம் வடமொழி மந்திரம் போல் ஏழைக்குப் புரியாத சட்டச்சரத்துக்களை சாக்குப் போக்காகச் சொல்லி,