பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 ஏட்டுச்சுரைக்காய் தீர்ப்புகள்

காலத்தைத் தாழ்த்தி நீதியையும் தாழ்த்தி விடுகிறது. தாமதப்பட்ட நீதி - மறுக்கப்பட்ட நீதி என்ற புகழ்மிக்க சட்டப்பழமொழியை நடைமுறையில் கண்டாலும் ஒருத்தர் தாமதப்பட்ட நீதியைப் பெறுகிறார். அப்படியும் அந்த நீதி மறுக்கப்படுமானால், அதை எந்த மொழியால் அழைப்பது?

ஆக, ஏட்டுச் சுரைக்காய் தீர்ப்புகளை, எப்படி அரங்கேற வைப்பது என்பதே சமூக நீதியில் அக்கறை கொண்ட அத்தனை பேரும் சிந்தித்து பரிகார நடவடிக்கைகளை எடுத்துக்கூற வேண்டியது கட்டாயமாகிறது. காரணம் இதில் பெரும்பாலும் ஏழைகள், குறிப்பாக பெண்களே பாதிக்கப்படுகிறார்கள். இறந்து போன கணவரின் வாரிசான இளம் விதவைக்கு சொத்துக்கள் கொடுக்கப்படாமல் அவள் விரட்டியடிக்கப்படுகிறாள். நீதிமன்றத்தில் இவளுக்கு முன்கதவு திறக்கப்பட்டு, இவளது மாமியார், மாமனார், மச்சான் வகையறாக்களுக்கு பின்கதவு திறக்கப்படுகிறது.

கண்காணிப்பு ஆணையம்

எனவே, நீதிமன்ற தீர்ப்புகளைச் செயல்படுத்துவதற்கு மாநில அளவில் உயர்நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் ஒரு கண்காணிப்பு ஆணையம் உருவாக்கப்பட வேண்டும். இந்த ஆணையம் ஒப்புக்கு ஐந்தாறு பேரை மட்டும் நாற்காலியில் அமர்த்தாமல், மாநிலம் முழுவதும் ஆலமரமாய், வேர் விட்டும், விழுதுகள் விட்டும் பல்கிப் பரவி இருக்கவேண்டும். ஒவ்வொரு நீதிமன்றத்தின் தீர்ப்பும், செயல்படுத்தப்படுகிறதா என்று இந்த ஆணையமே கண்காணிக்கவேண்டும். இதுகுறித்து ஒவ்வொரு தீாப்பின் செயலாக்கம் பற்றி சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். கைக்கெட்டினாலும் வாய்க்கு எட்டாத நிலைபோல நீதி கிடைத்தாலும் அதன் பலனை அனுபவிக்க முடியாமல் தவிப்பவர்களின் முறையீடுகளுக்காக காத்திருக்காமல், இந்த ஆணையமே தன்னிச்சையாக ஒவ்வொரு தீர்ப்பையும் அது செயல்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டும். இதற்கு காலவரம்பும் நிர்ணயிக்க வேண்டும். நீதியின் மறுபக்கமான தீர்ப்பை நிலைகுலைய வைப்பவர்கள் மீது சிறைத்தண்டனை உட்பட கடுமையான தண்டனைகள் விதிக்க வேண்டும். இத்தகைய அமைப்பிலும் ஊழலும் பாரபட்சமும் இருக்கலாம். ஆனாலும், இப்படிப்பட்ட அமைப்பு ஒன்று இருக்கிறது என்கிற எண்ணமே, நீதிமன்ற தீர்ப்பிற்கு ஒரு மரியாதையைக் கொடுக்கும்.

ஒரு தீர்ப்புக்குப் முன்னால், வாய்தாக்கள் மாதங்களாகி ஆண்டுகளாகின்றன. இந்த வாய்தாவே தண்டனையைவிட கொடுரமானது. வாதிகளும், பிரதிவாதிகளும் பல்வேறு இடங்களில்