பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 5

தேவையில்லை என்றும் பரம்பொருளுக்கு காணிக்கையோ, காவடியோ அவசியமில்லை என்றும் அறிவுறுத்தியிருக்கிறார். கடவுளை வேட்டையாடும் மாடன்களாகவும், பயமுறுத்தும் பேச்சியம்மாக்களாகவும் பார்த்துக் கொண்டிருந்த தாழக்கிடந்த மக்களை அதே மதத்தை மேட்டுக்குடியினர் போல் அறிவுப் பூர்வமாக அணுகச் செய்திருக்கிறார். பெரும்பாலான கிராமங்களில் நிழல் தாங்கல்கள் என்ற சிறு சிறு கோவில்களை நிறுவி, அங்கே தீபமேற்றி அந்தத் தீபத்தின் அருவ வழிபாட்டில் இந்த மக்களை ஈடுபடுத்தியிருக்கிறார். மேட்டுக்குடியினரே அரைகுறை ஆடையோடு ஆலயம் சென்று வழிபட்டபோது, இந்த ஏழை எளிய மக்கள் தலைப்பாகை கட்டி கோவிலுக்குள் சென்றது வைகுண்டரின் மிகப்பெரிய ஆன்மீகப் புரட்சியாகும். . அதோடு இவர்களை ஒரு கொடியின் கீழ் கொண்டு வருவதற்காக காவி நிறத்தில் தீபம் பொறித்த அன்புக் கொடி ஒன்றையும் ஆக்கியிருக்கிறார். இவரது முறையில் வழிபடும் மக்கள், ‘அன்புக் கொடி மக்கள்’ என்று இப்போதும் அழைக்கப்படுகிறார்கள். சமரச சுத்த சன்மார்க்க சங்கம் நிறுவி சாதிபேதமற்ற சமயக் கொடியை ஏற்றுவித்த வள்ளலாருக்கு முன்பே, வைகுண்டர், இப்படி ஒரு கொடியை உருவாக்கியது இன்றைய ஆன்மீகவாதிகளுக்கே தெரியாது. துவையல் பந்தி-முத்திரிக் கிணறு...

மேட்டுக்குடியினர், கீழ்க் குடியினரை அழுக்காக்கியும், அந்த அழுக்கிலேயே ஆழ்த்தியும் கைகொட்டி நகைத்த காலத்தில் தூய்மையின் அவசியத்தை உணர்ந்த வைகுண்டர், துவையல் பந்தி என்ற ஒரு செயல் முறைமையை கொண்டு வந்திருக்கிறார். இதன்படி அத்தனை சாதியினரும், கடலில் நீராடி, மதியம் பச்சரிசி, பயிறு சாதத்துடன் ஒன்றாய் உண்டு-ஒன்றாய் உறவாடி இருக்கிறார்கள். இந்தப் பந்தி, வையம்பதி என்ற இடத்தில் வைகுண்டரின் தலைமையில் ஆறு மாத காலம் நடந்திருக்கிறது. இதனால் வெகுண்ட மேட்டுக் குடியினர் இந்தப் பந்தியில் கலந்து கொண்ட மக்களைச் சிதறடித்ததாகவும், இதையும் மீறி இந்தத் துவையல் பந்தி பல இடங்களில் நடந்துள்ளதாகவும் தெரிகிறது.

இன்று சமபந்தி போஜனம் தொலைக்காட்சி, பத்திரிகைகள் சாட்சியாக நடத்தப்படுகிறது. இதற்கு நூற்றை ம்பது ஆண்டுகளுக்கு முன்பே, இதைவிடச் சிறப்பான முத்திரிக் கிணறு என்ற இன்னொரு செயல்பாட்டு முறைமையை வைகுண்டர் கொண்டு வந்திருக்கிறார். இதன்படி, இவர் தவமிருந்த தாமரைப்பதிக்கு அருகே, ஒரு கிணறு வெட்டப் பட்டுள்ளது. ஊர்க் கிணறுகளில் எட்டிப் பார்க்கக்கூட உரிமை