பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 34 வேரில் பழுத்த பலா

மத்திய தகவல் சர்வீஸுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, டில்லி வானொலித் துறையில், தமிழ்ச் செய்திப் பிரிவில் சப் எடிட்டராக நியமித்த ஒர் ஆர்டர் வந்தது.

டில்லி வானொலியில், தமிழ்ச் செய்திப் பிரிவில் சேர்ந்தேன். எல்லா மொழி செய்திப் பிரிவுகளும், குதிரை லாயம் போன்ற ஒரு கட்டிடத்திற்குள் இருந்தன. எல்லா மொழிக்காரர்களையும் ஒரே சமயத்தில் பார்த்ததும், பழகியதும் இனிமையான அனுபவம். முதல் நாளே, கான்டீனுக்குப் போன் செய்து ‘இட்லி ஹை.. வடா ஹை.. என்றேன். ‘குச் நை’ பதில் வந்தது. உடனே ‘ஏக் பிளேட் குச்சி நை ஹை என்றேன். (குச்சி நை’ என்றால் ஒன்றம் இல்லை என்று இந்தியில் அர்த்தம்.)

செய்தி வாசிப்பாளராக...

ஒரு மாதம் ஆகிவிட்டது. செய்திகளைப் படிப்பது என் வேலை இல்லை என்றாலும், எனக்குப் படிக்க ஆசை. எப்படியோ படிக்கும் பணியும் கிடைத்துவிட்டது. நான்கு கோடி தமிழ் மக்களும் என் வாசிப்பைக் கேட்க உன்னிப்பாய் இருப்பதுபோல் எனக்குள் ஒரு எண்ணம். அந்த நாளும் வந்தது. மத்தியானச் செய்தியைப் படிக்க, சகாக்களுடன் போனேன். ஏர் கண்டிஷன் செய்யப்பட்ட ஸ்டுடியோவிற்குள் என் உடம்பு வேர்வையில் நனைந்தது. கைகால்கள் ஆடின. பேடரைத் திறக்க வேண்டும். சிவப்பு விளக்கைப் பார்க்க வேண்டும். படிக்கத் துவங்கினேன். பத்து நிமிட செய்தியை ஆறு நிமிடத்திற்குள் முடித்துவிட்டு, நான்கு நிமிடத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தேன்.

சகாக்கள், தயாராகக் கொண்டு வந்திருந்த, ஏற்கனவே காலையில் படித்து முடித்த செய்திகளை, பலாத்காரமாய்ப் பிடுங்கி, அங்கொன்றும் இங்கொன்றுமாகப் படித்து முடித்தேன்.

சென்னையில் பல்வேறு பேச்சுப் போட்டிகளில் வென்றும், தமிழ் மாணவர் தலைவராக திகழ்ந்தும் செயல்பட்ட எனக்கு அங்கே என்னுடைய சகாக்களோடு ஒன்றிக்க முடியவில்லை. இதற்கு நான் காரணமல்ல. என்னுடைய ஆங்கில உச்சரிப்பிற்காக எதிரே உள்ள மலையாளப் பிரிவு அலுவலர்களை கண்சிமிட்டி சிரிப்பார்கள். எனது பணி செய்திகளை மொழியாக்கம் செய்வது. ‘சொன்னார்’ என்று எழுதினால் அதை அடித்துவிட்டு தெரிவித்தார் என்று திருத்துவார்கள். தெரிவித்தார் என்று எழுதினால் சொன்னார்’ என்று திருத்துவார்கள். இப்படி