பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 38 வேரில் பழுத்த பலா

ஆசைப்பட்டேன். பேருந்து நிலையத்தில், கூட்டத்தில் தவிப்பவரை எப்படிக் கூட்டம் உள்ளே தள்ளிவிடுமோ, அப்படி எனது சகாக்களில் பலர் என்னை சென்னைக்கு தள்ளிவிடுவதில் உதவிகரமாய் இருந்தார்கள். மூன்றாண்டு காலம் சென்னையில் களவிளம்பரத்துறை அதிகாரியாக காரோடும், பேரோடும், மேலதிகாரிகளோடு சண்டை சச்சர்வுகளோடும், நீடித்தேன். இதில் கிடைத்த அனுபவங்களும், களநிகழ்ச்சிகளும் நான் கதைஎழுத உதவின. மூன்றாண்டுகளுக்குப் பிறகு, உதவி செய்தி ஆசிரியராக பதவி உயர்வு ஏற்பட்டு டெல்லிக்கு மாற்றப்பட்டேன்.

பைத்தியக்கார மருத்துவமனையை போல...

டெல்லியில் அத்தனை இந்திய மொழிகளுக்கும் செய்திகளை ஆங்கிலத்தில் கொடுக்கும் ஒரு மாபெரும் கூடம். இதற்கு ஜி.என்.ஆர்., அதாவது ஜெனரல் நியூஸ் ரூம்’ என்று பெயர். இப்போது குளிர்சாதன வசதிகளோடு நவீனமாக உள்ள அந்தக்கூடம் அப்போது மாட்டுத் தொழுவம்போல் இருந்தது. இதன் மத்தியில் மிகப்பெரிய நாற்காலியில் பொறுப்பாசிரியர் உட்கார்ந்திருப்பார். பக்கவாட்டில் தென்னிந்திய, வடஇந்திய, கிழக்கிந்திய மொழிகளுக்கான உதவி செய்தி ஆசிரியர்கள் இருப்பார்கள். டெலிபிரிண்டர்கள் இரையும். டெலிபோன்கள் கத்தும். இண்டர்காம்கள் அலறும், தந்திகள் குவியும். பிறநாட்டு ஒலிபரப்புகள் முனங்கும். உதவி செய்தி ஆசிரியர்கள் பொறுப்பாசிரியரை சூழ்ந்து கெர்ண்டு தத்தம் தலைப்பு செய்திகளைக் காட்டி அங்கீகாரத்திற்காக நிற்பார்கள். செய்தி நேரம் நெருங்குவதைப் பார்த்து, பல்வேறு வினோதமான குரல்களை எழுப்புவார்கள். ஆகமொத்தத்தில் புரியாதவர்களுக்கு அது ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரியாகவே தெரியும்.

தொழில் குருநாதர் இராமநாதன்

இத்தகைய மருத்துவமனையில், உதவி செய்தி ஆசிரியரான அடியேன், என்னை எந்த செய்திப் பிரிவு இழிவுப்படுத்தியதோ அந்த செய்திப்பிரிவிற்கும், செய்திக் கட்டளைகளை தீர்மானிக்கும் பொறுப்பில் இருந்தேன். பொறுப்பாசிரியர்கள் பெரிய அதிகார அந்தஸ்து கொண்டவர்கள். அவர்கள்தான் செய்திகளின் போக்கை தீர்மானிக்க வேண்டியவர்கள். இதில் குறிப்பிடத் தக்கவர் இந்தியன் எக்ஸ்பிரஸில் மூத்த செய்தியாளராக பணியாற்றிவிட்டு, டெல்லியில் வானொலி செய்தி ஆசிரியராக பணியாற்றிய திருமிகு. இராமநாதன் அவர்கள். இவர்தான் எனது தொழில் குரு தூசி படிந்த இந்தக் கண்ணாடியை துடைத்துவிட்ட செய்தி மேதை. ‘வருவதைப் படி, படித்ததை