பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 1 39

துார எறி எது மனதில் நிற்கிறதோ அதுதான் செய்தி என்பார். இவருக்கு ஈடான செய்தி ஆசிரியர் எவருமே கிடையாது. எல்லோரின் பிரமிப்புக்கும் உரியவர். இப்போதும் நன்றாகவே நினைவுக்கு வருகிறது.

பங்களாதேசம் விடுவிக்கப்பட்ட செய்தி வந்தது. அதேசமயம் பாகிஸ்தானிய அதிபர், சண்டை தொடரும் என்கிறார். இந்த இரண்டையும், நம் மக்களின் மகிழ்ச்சி குன்றாத வகையில் செய்தியாகப் போடவேண்டும். எங்கள் செய்தி இயக்குநர் டாக்டர் பஜாஜ் அவர்கள் குழம்பிப் போனார். பொறுப்பாசிரியர் குழப்பிக் கொண்டிருந்தார். உதவிச் செய்தி ஆசிரியர்கள் உதட்டைப் பிதுக்கினார்கள். அப்போது டெஸ்கில் இருக்க வேண்டிய அவசியமில்லாத என் குரு இராமநாதன் எங்கிருந்தோ வந்தார். எல்லோரும் அவரை மொய்த்தார்கள். சோமபாணம் கொடுக்கவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், அவர் ஒரு தலைப்புச் செய்தியை ஆங்கிலத்தில் கொடுத்தார். அதன் தமிழ்வடிவம் இதுதான்.

“பங்களாதேஷ் விடுவிக்கப்பட்டாலும், இந்தியாவுடனான போர் தொடருமாம். இந்த விடியலுக்கு மத்தியில் பாகிஸ்தான் அதிபர் தன் மக்களுக்கு ஆறுதலாக இப்படி ஒரு ஆண்மையற்ற அச்சுறுத்தலை அறிவித்திருக்கிறார்.”

இந்த தலைப்புச் செய்தியை கேட்டு, அனைவரும் மகிழ்ந்து போ னார் க ள் . இப் பேர் பட்ட இவர் எ ன் ைன பொறுப்பாசிரியரான தனக்கு, உதவி ஆசிரியராக வைத்துக் கொண்டார். அரசியல் முக்கியத்துவம் உள்ள செய்திகளை ‘எடிட்’ செய்து எழுதுவது என் பொறுப்பு. அவரிடம் காட்டினால், என்னை கண்டபடி திட்டுவார். எல்லோரும் சிரிப்பார்கள். இன்னொரு நாளும் இப்படி திட்டி முடித்துவிட்டு சிரித்தவர்களை தன்னருகே கூப்பிட்டார். சமுத்திரத்தை திருத்த முடியும். அவனுக்கு இயல்பான அறிவு இருக்கிறது. அதனால்தான் திட்டுகிறேன். நீங்களோ புத்தி கெட்டவர்கள். ஆகையால்தான் உங்களை திட்டவில்லை” என்று ஆங்கிலத்தில் முழங்கினார்.’

என்றாலும் திட்டிக்கொண்டே இருந்தார். நான் ஒரு தந்திரத்தை கடைப்பிடித்தேன். அவர் சிகரெட்டிற்காக அங்குமிங்கும் பார்க்கும்போது, என்னிடம் உள்ள சிகரெட்டை அவர் வாயில் வைத்து, நெருப்பிட்டுக்கொண்டே, தலைப்புச் செய்தியைக் காட்டுவேன். சிங்கக்குட்டிடா நீ என்று அதை கிளியர் செய்துவிடுவார். பிறகு, என் செய்தியில் உள்ள தப்பை