பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 42 வேரில் பழுத்த பலா

திடீர் கதாநாயகன்

இதன் விளைவாக, ஒரிரு மாதங்களில் இந்திய செய்தி தகவல் அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். எனது மேல் அதிகாரிகளின் பலர் தங்களுக்கு அமைச்சரவை சிக்கல் கொடுக்கும் போதெல்லாம் இந்த காலா மதராசியிடமே வருவார்கள். எந்த அமைச்சகத்துக்கு கைகட்டி வாய் பொதித்து சென்றேனோ, அந்த அமைச்சகத்தில் மூத்த அதிகாரிகளோடு, என்னால் முரண்டுபிடித்து வாதாட முடிந்தது. இது என் பலம் அல்ல. ஒரு இயக்கத்தின் பலம் என்பதை உணர்ந்து கொண்டேன்.

எங்கள் அமைச்சரவைக்கு, நான் ஒரு தலைவலியாக ஒரு கட்டத்தில் தோன்றியது. அமைச்சரவைக்கு எதிரான, நியாயமான போராட்டத்தில் இப்போது என்.எப்.டி.சி எனப்படும் தேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவனத்தின் சென்னை மேலாளர் திரு. பி.ஆர். பரமேஸ்வரன், மத்திய கிராமிய மின்சார வாரியத்தில் மூத்த அதிகாரியாக உள்ள நாயர் (அப்படித்தான் கூப்பிடுவேன் முழுப்பெயர் தெரியாது), எங்களது மூத்த அதிகாரியும், சங்கத் தலைவருமான திரு. எஸ்.சி. பட் போன்றவர்கள் எனக்கு பக்க பல மாக இருந்தார்கள். இப்போது சென்னை தொலைக் காட்சியில் செய்தி ஆசிரியராக இருக்கும் பாலசுப்ரமணியம், எனது சங்க நடவடிக்கைகளுக்கு பெரிதும் உதவினார். அமைச்சரவை, செய்தித்துறைக்காக நியமிக்கும் ஆணைகளின் நகல் ஒவ்வொன்றும், என் பெயருக்கும் வரும். இந்தியா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் உள்ள மத்திய செய்தித் துறைத் தோழர்களுக்கு என்பெயர் அத்துபடி.

இந்தப் பின்னணியில் குடும்பச் சூழ்நிலை காரணமாக சென்னைக்கு மாற்றும்படி அமைச்சரவைக்கு விண்ணப்பித்தேன். முன்பு ஆண்டு க் கணக்கில் கை யெடுத்து கும் பிடாத குறையாக போட்ட விண்ணப்பங்களை கண்டுகொள்ளாத அமைச்சரவை, தங்களது தலைவலி தீர்ந்ததுபோல் காலையில் போட்ட விண்ணப்பத்திற்கு மாலையிலே சென்னை வானொலி பத்திரிகைக்கு உதவி செய்தி ஆசிரியராக மாற்றியது.

ரப்பர் இல்லாத மின்சாரம் (LIVE WIRE)

எவருக்கும் இல்லாத வழக்கமாக சங்கம் எனக்கு பிரிவு உபச்சாரவிழா நடத்தியது. இதில் பேசிய ஒரு இளையசகா, “சமுத்திரம் இரண்டு மகத்தான காரியங்களை சாதித்திருக்கிாறர். ஒன்று, நமக்கெல்லாம் கெஜட்டட் அந்தஸ்து வாங்கி கொடுத்திருக்கிறார். இரண்டாவதாக, அவருக்கு டிரான்ஸ்பரையும்