பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 143

வாங்கிக்கொண்டார். ரப்பர் இல்லாத மின்சார ஒயரான இவர் நம்மிடையே இருந்தால் நன்றாக இருக்கும்” என்றார்.

இப்படியாக, வானொலி செய்தி ஆசிரியராய், மீண்டும் களவிளம்பர அதிகாரியாய், “திட்டம்’ பத்திரிகையின் உதவி ஆசிரியராய், சென்னை தொலைக்காட்சியின் உதவி செய்தி ஆசிரியராய், பெங்களுரில் களவிளம்பரத் துறை தலைமை அதிகாரியாய், சென்னை வானொலி நிலையத்தின் செய்தி ஆசிரியராய், அங்கிருந்து சென்னை தொலைக்காட்சி செய்தி ஆசிரியராய், பின்பு அங்கிருந்து துரத்தப்பட்டு, அதே சென்னை வானொலி நிலையத்தில் மூத்த செய்தியாளராய், இறுதியாக சென்னை சாஸ்திரிபவனில் செய்தி விளம்பரத்துறை இணை இயக்குநராய் பணியாற்றி, வயதுக்கு வராமலேயே ஒய்வு பெற்றேன். அதாவது, கிராமத்தில் என் உண்மையான வயதை ஒன்றே முக்கால் வருடம் கூட்டிப் போடப்பட்டதே காரணம்.

இந்த 33 ஆண்டுகால அலுவலக வாழ்க்கையில் ஐந்து இணைச் செயலாளர்களுக்கு எதிராக எழுத்து மூலமாக போராடி இருக்கிறேன். இரண்டு உடனடித் தலைமை அதிகாரிகளுக்கு எதிராகவும் போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. உயர்நீதிமன்றம், மத்திய அலுவலர் தீர்ப்பு ஆணையம் போன்ற நியாயத் தலங்களுக்கு அரசை எதிர்த்து பலதடவை சென்றிருக்கிறேன். அத்தனை வழக்குகளிலும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் தோழர் செந்தில்நாதன் எனக்காக வாதாடினார். ஏதாவதொரு வகையில் வெற்றிகள் எனக்கு கிடைத்தன. ஆனால், அதில் விழுப்புண்கள் இன்னும் வலித்துக்கொண்டே இருக்கின்றன.

நான் 1998 மார்ச் மாதத்தில் பதவியிலிருந்து ஒய்வு பெற்றேன். அப்போது மத்திய அரசு அதிகாரிகளுக்கு நீட்டிப்பு கொடுக்கும் பொறுப்புள்ள துறைக்கு அமைச்சராக இருந்தவர் என் இனிய நண்பர் எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் அவர்கள். தோழர் செந்தில்நாதனைப் போல முப்பதாண்டு கால நண்பர். எஸ்.ஆர்.பி. என்று அழைக்கப்படும் இந்தத் தோழர், எனக்காக பலதடவை மேலதிகாரிகளோடு வாதாடியவர். என்னிடம் பதவி நீட்டிப்புக்கு விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொண்டார். இவர் என் நண்பர் என்பதை தெரியாத எங்கள் களவிளம்பரதுறை தலைமை இயக்குநரான சுரோஷ் சோப்ரா அவர்களும், நிர்வாக துணை இயக்குநர் பீர் அவர்களும் நீட்டிப்பு கேட்கும்படி என்னை கேட்டுக்கொண்டார்கள். எந்த சமுத்திரம் மேல் அதிகாரிகளுக்கு தலைவலி போல் தோற்றம் காட்டினானோ அந்த சமுத்திரத்திற்கு அவர்கள் உதவ முன்வந்தது நெஞ்சை