பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 1 45

“நேர்மையாக இருக்கவேண்டும். விசுவாசமாகவும் இருக்க வேண்டும்... திறை யயும் வளர்த்துக் கொள்ளவேண்டும். பொதுச் சொத்தில், ஒருகாசு கூட எந்த வகையிலும், நம்பையில் விழக்கூடாது... கெட்டது நடந்தால் அவ்வப்போது சாடி நல்லதின் பக்கம் நிற்கவேண்டும். கோடிக்கணக்கான மக்கள் கொடுக்கும் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிற என்னைப் போன்ற அரசு ஊழியர்கள், அந்த மக்களை மனதில் நினைத்து விசுவாசமாக பணியாற்றினால், நமது குடும்பம் “ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேரூன்றும்”

இரண்டாவதாக, “தாழ்த்தப்பட்ட-பிற்படுத்தப்பட்ட மக்கள் தூசி படிந்த கண்ணாடி. இந்தத் தூசியை, மேல் அதிகாரிகளாக இருப்பவர்களில் நான் குறிப்பிட்ட இராமநாதன் அவர்களைப் போல் துடைப்பவர்களும் உண்டு. எனது தமிழ் செய்தி துறைத் தலைவர் போல் தூசியை துடைக்கிறேன் என்கிற சாக்கில் உடைப்பவர்களும் உண்டு.

புதிதாக பணியில் சேருகின்ற இந்த இரு பிரிவு இளைஞர்களும் இதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த அடிப்படையில்தான் நான் ‘வேரில் பழுத்த பலா” என்ற நாவலை எழுதி ‘சாகித்ய அகாதமி விருதும் வாங்கினேன்.

இந்தச் சந்தர்ப்பத்தில், ஆரம்பத்தில் தூசி படித்த இந்தக் கண்ணாடியை உடைக்க முயற்சித்தவர்கள் மீது எந்தக் கோபமும் கொள்ளாமல், அதன்மீது படர்ந்த தூசிகளை துடைத்து விட்ட மேல் அதிகாரிகளையும், சகாக்களையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். காலா மதராசிகளுக்கு இக்கட்டான அறுபதுகளில், டெல்லியில் நுழைந்த எனக்கு என் போர்க்குணத்தை கூர்மைப்படுத்திய அப்போதைய டெல்லிப் பேராசிரிய தம்பதிகளான சாலப் இளந்திரையன், சாலினி இளந்திரையன், கோயில்பிள்ளை, எனக்கு யோகாசனம் சொல்லிக்கொடுத்த உறவினரான திரு. தங்கச்சாமி, முடித்திருத்தகம் நடத்திய என் தோழர் முதலியோருக்கு நன்றிக்கடன் பட்டவன்.

மத்திய தேர்வாணையக் குழுவிற்கு 1966-ஆம் ஆண்டு. நேர்காணலுக்காக சென்ற முகம் தெரியாத இந்த முகத்திற்கு தன் சொந்த வீட்டிலேயே இடம் கொடுத்து ஆதரித்த முத்துச்சாமி என்ற தோழரையும் (இப்போது மதுரையில் இருக்கிறார்), இப்போதும் எனது பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ளும் தொலைக் காட்சி இணை இயக் குநர் இராமகிருஷ்ணனையும், துணை இயக்குநர் பீர்முகம்மதையும், இந்திய திரைப்பட நிறுவனத்தின் தென்னக மேலாளர் பி.ஆர். , .