பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 வேரில் பழுத்த பலா

பரமேஸ்வரனையும், சென்னை தொலைக்காட்சி இயக்குநர் ஏ. நடராசனையும், சென்னை வானொலி இயக்குநர்களான எம்.எஸ். கோபால், செல்வம், விஜய திருவேங்கடம், வேணுகோபால் ரெட்டி, சுப்பிரமணியம், நெல்லை வானொலி இயக்குநர் குக நமச்சிவாயம், சென்னை வானொலி நிகழ்ச்சி தயாரிப்பு அதிகாரி ரவீந்திரன், குமார், என்னை கேளாமலேயே எனது நாவல்களை ஒலிபரப்பிய இப்போதைய சென்னை வானொலி நிலைய இயக்குநர் வி.ஆர். குமார், இனிய தோழர் நல்லதம்பி, தஞ்சைவாணன், ஒய்வுபெற்ற-இப்போதும் என்னுடன் தொடர்பு வைத்திருக்கும் எனது இளைய சகாக்களான, கள விளம்பர அதிகாரிகள் தனசேகரன், திரேசநாதன், தமிழ்மணி, ரவி போன்ற தோழர்களையும் இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கும்போது மனம் நெகிழ்கிறது. அன்புக்கு ஈடாக எதுவும் இல்லை என்று அழுத்தமாகச் சொல்கிறது.

எண்க்கு அரசுப் பணியில் சோதனை நேரும்போதெல்லாம் என்பக்கம் நின்ற யு.என்.ஐ. தோழர். ரமேஷன், தினமணி சிகாமணி, தினந்தந்தி சுகுமார், தினமலர் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி, அதன் செய்தியாளர் அமுதன், செம்மலர் ஆசிரியர் கே.எம். முத்தையா என் இனிய நண்பர் செந்தில்நாதன் ஆகியோர்கள் ஏதோ ஒருவகையில் அரசுப் பணியில் நான் நிலைத்திருக்க உதவி செய்தவர்கள்.

இந்தக் கட்டுரையும், வீட்டைக் கட்டிப்பார் கட்டுரையும் பிரசுரமாக காரணகர்த்தாவாக இருந்த குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. அவர்களும், ஜ.ரா. சுந்தரேசன் அவர்களும் இந்த கட்டுரைகளை பிரகரிக்கவில்லை என்றால் உங்களோடு நான் இப்படி விரிவாக என் அனுபவங்களை பகிர்ந்திருக்க முடியாது.

மேலே குறிப்பிட்டட அத்தனை பேரும் எனக்கு இனிய நினைவுகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒய்வுபெற்ற ஒருவருக்கு இனிய நினைவுகள் மட்டுமே இருந்தால் அதற்கு ஈடேது? இணையேது? இன்றைய இளைஞர்களுக்கு அண்ணல் காந்தியடிகள் சொன்னதுபோல் என் வாழ்க்கையே ஒரு செய்தியானால் மகிழ்வேன்.

பின்குறிப்பு: இந்தக் கட்டுரையில் சில பகுதிகள் குமுதத்தில் வந்தவை அல்ல.

குமுதம் - 1983.