பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 7

போராட்டத்திற்கு எதிராக தீர்ப்பளித்தபோது, கிறிஸ்தவ பாதிரிமார்களும், வைகுண்டரும் இந்தப் பெண்களுக்கு உடலுக்கு ம ட் டு ம ல் ல , உள் ள த் தி ற் கு ம் ஒ ரு ம ரி யா ைத கொடுத்திருக்கிறார்கள்.

வைகுண்டர் குறித்த புராணப் பொய்களையும் செவி வழிக் கதைகளையும் புறந்தள்ளி விட்டுப் பார்க்கும்போதுகூட, அவர் இப்போதைய தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட அப்போதைய அவர்னர்களுக்கு ஒரு சின்னமாக விளங்கி இருக்கிறார். இவரை, திருவாங்கூர் அரசு சிறைபிடித்தபோது வைகுண்டரைப் பகைக்க வேண்டாம் என்று கவாதித் திருநாள் மன்னரிடம், வாதாடிப் போராடி, அதனாலேயே அந்த மன்னனால் சிறையில் வைக்கப்பட்டவர் பூவண்டன் என்ற இடையர் சாதியைச் சேர்ந்த பெருமான். இவர் அரசில் உயர்ந்த பதவி வகித்தவர். இதேபோல் தாமரைப் பதியில் 96 வளைவுகளைக் கொண்ட தத்துவக் கொட்டகையை அமைத்துக் கொடுத்தவர் முத்துக்குட்டி ஆசாரி என்பவர். ‘சாரையோடு’ வண்ணார்குல பிச்சையம்மாள், வடிவீஸ்வரம் வெங்கடாச்சல அய்யர், தென் தாமரைக்குளம் கிறிஸ்தவரான அருமைநாயகம்’, ‘தொண்டைமான் ராமலிங்கம், மணவாளன் குறிச்சி கடவுள் செட்டியார், தச்சநல்லூர் வெள்ளாளர் அழகப்பப் பிள்ளை, ‘அரியநந்தல் வீரய்யாத் தேவர், குறும்பர் இனத்தின் குபேரன் போன்ற அத்தனை சாதி மாந்தர்களும் வைகுண்டரின் ஒரே சாதியில் இரண்டறக் கலந்த சமகாலத்து தொண்டர்கள்.

அருளாளர்களில் இரண்டு வகை உண்டு. முதலாவது சாதியை மறுத்தவர்கள். இரண்டாவது தன்னளவில் சாதியைத் தாண்டியவர்கள். பொதுவாக நமது அருளாளர்களான சங்காராச்சாரியார்களும், சாமி தயானந்த சரஸ்வதியும், இராம கிருஷ்ண பரமஹம்சரும், ரமண ரிஷியும் தங்கள் அளவில் சாதிகளைத் தாண்டியவர்கள். ஆனால் வைகுண்டரும், வள்ளலாரும் சாதியை மறுத்தவர்கள். அதற்காக பாடுபட்டவர்கள். இதனால் வைகுண்டர் சிறை வைக்கப்பட்டார். அப்போதைய மதவாதிகளால் கல்லடியும், சொல்லடியும் பட்டார். சாதி சமயம் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் சோதி என்று செம்மாந்து சொன்ன வள்ளலாரை, தீவிர சைவர்கள் இன்று கூட ஏற்பதில்லை. இவரது திருவருட்பாவை மருட்பா என்று அறிவிக்கக் கோரி கடலூர் நீதிமன்றம் சென்றவர் யாழ்பாணத்துத் தமிழறிஞர் ஆறுமுக நாவலர்.

இந்த இரண்டு பெரிய ஆன்மீகப் போராளிகளும் இன்றைய சாதித் தமிழனுக்கு தேவைப்படுகிறது. இவர்களோடு, மேட்டுக்குடியான பாளைய அரசை பாஞ்சாலங்குறிச்சியில்