பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 உலகம்மை-என் அம்மை

களால் நிச்சயிக்கப்படுவதை உணர்ந்து, ஒரு கிழவனுக்கு தான் நிச்சயிக்கப்பட்டிருப்பதை முறையிட்டும், அகலக் கைவிரித்த சு றத்தையும், காதலனையும், துச்சமாக்கி, தன் தலைவிதியைத் த னே நிர்ணயிக்கக் கிளம்பிய சோற்றுப் பட்டாளம். சுந்தரி

ஆரம்ப காலத்தில் தன் நகைகளை மூலதனமாக்கி தொழிற்சாலையை துவங்கிய கணவனும், புகுந்த வீடும், தனக்கு. குஷ்டரோக நோயின் அறிகுறிகள் தெரிய துவங்கியதும், கொடுமை புரிய, அவற்றின் வெம்மை தாங்காமல், அனாதை விடுதியில் அடைக்கலமாகி, பிறகு அந்த விடுதியின் வளர்ச்சிக்காக, கணவனையும், அண்ணன் தம்பிகளையும் எதிர்த்துப் போராடி, தன் சொத்தைப் பிரிக்கும் இல்லந்தோறும் இதயங்கள் ‘மணிமேகலை’

ரெளடியைக் கல்யாணம் செய்ய மறுத்ததற்காக, வளர்ப்புத் தாயால் விரட்டப்பட்டு, வறுமையால் வாடும் பெற்ற தாயிடம் வந்து, ஏழைப் பெண்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தும் வீட்டுக்கார அம்மாவுக்கு எதிராகப் போராடி, தன்னை பாட்டாளி வர்க்க ஜனசங்கிலியில் இணைத்துக் கொள்ளும் வளர்ப்பு மகள்” மல்லிகா

ஆகிய இந்தப் பாத்திரங்கள் என்னை எழுத்தாளனாக அங்கீகரித்தவை. சோற்றுப் பட்டாளம் ஒரு கல்லூரியில் பாட நூலாகவும், வளர்ப்பு மகள் மத்திய செகண்டரி போர்டின் கீழ் இயங்கும் உயர்நிலைப் பள்ளிகளில் 12வது வகுப்பிற்கு பாட நூலாகவும் வைக்கப்பட்டுள்ளன. என்றாலும்

உலகம்மை உலகம்மைதான்

எனக்கு மிகவும் பிடித்த பெண் பாத்திரம், இதுவரை கந்தரி போலவோ, அல்லது மல்லிகா போலவோ, நாட்டு மக்களுக்கு அதிகமாக அறிமுகமில்லாத ஒரு கோட்டுக்கு வெளியே நாவலில் வரும் உலகம்மைதான்! முன்னைய கதாபாத்திரங்கள், நான் பெற்ற பெண்கள். ஆனால் உலகம்மையோ, எனது தாய். முன்னவர்களை நான் எழுதி வளர்த்தேன். இவளோ, என்னை எழுதச் சொல்லி வளர்த்தாள்.

முதலில் கதையைச் சொல்கிறேன்.

உலகம்மை, குட்டாம்பட்டியில் உள்ள ஒரு பனையேறியின் மகள். இளம் வயதிலேயே தாயை இழந்தவள். இருபத்தோரு வயதுக்காரி. பனையில் இருந்து விழுந்து, முடங்கிப் போன தந்தையைக் காப்பாற்ற வேண்டியவள். விவசாயக் கூலிப் பெண் அவள் வீட்டின் மனைகூட ஒரு பண்ணையாருக்கு உரியது.