பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 155

தன்னையறியாமலே-கண்ணுக்குப் புலனாகாத, கருத்துக்குப் புலனாகாத ஏதோ ஒரு சமூக உணர்வு உள்ளவள்.

ஆள் பலமும், பண பலமும் கொண்ட பீடிக்கடை “ஏஜெண்ட்’, பீடி சுற்றும் தன்னை பெண்டாள நினைப்பதை அறிந்து, ‘ஒனக்கு அறிவிருக்கா? ஒன் அக்கா தங்கச்சிய இடியேண்டா என்று சொல்லி விட்டு, வயல் வேலைக்குப் போகும் வைராக்கியம் கொண்டவள்.

வகுப்பும்-வர்க்கமும்

சக கூலிப் பெண்கள், அவளின் தொழில் மாற்றத்திற்குக் காரணம் கேட்டபோது, ஏஜெண்டைப் பற்றி முறையிட, ‘அவனை செருப்பால் அடித்திருக்க வேண்டும் என்று யோசனை சொன்ன ஒருத்தியைப் பார்த்து நீயாயிருந்தா அடிக்கலாம். ஒனக்கு அண்ணன், தம்பி, சொக்காரான் சொகக்காரன் இருக்கு. எனக்கு யாரிருக்கா?,....அவன் திருப்பியடிச்சா கேட்க நாதியில்லியே..... இல்லாதவன் பொண்ணு எல்லாத்துக்கும் மயினிதான் (அண்ணி) என்று, தன் நிலையை உணர்ந்த யதார்த்தமான பெண். அதே சமயம், பண்ணையார் மாரிமுத்து நாடாருடன் வயலில் இருந்து ஊருக்குள் போகும்போது, அவர் தன் மகள் சரோஜாவை பெண் கேட்க வரும் மாப்பிள்ளைக் குடும்பத்தை பனையேறிக் பய குடும்பமா? என்று கர்ணத்திடம் கேட்டபோது, பனையேறியின் மகளான உலகம்மை, தனக்குள்ளேயே சிந்திக்கிறாள்.

“பனையேறிப் பய குடும்பமான்னு” மாமா, நாக்கு மேல பல்லு போட்டு கேக்காரே... ஏன். இவரு தாத்தா... பனை ஏறினாராமே... பனையேறுற நாடார் சாணான்னும், ஏறதவங்க நாடார்னும் ரெண்டு சாதியா மாறிட... இப்படித்தான் ஜாதிங்க வந்திருக்குமோ?. இத்தன சாதி இல்லாம. ஏழைசாதி. பணக்கார சாதின்னு ரெண்டு இருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்! பிராமணன்ல ஏழை, பறையன் மாதிரி கஷ்டப்படுறான். பறையன்ல பணக்காரன் பிராமணன் மாதிரி குதிக்கான். ஏழைப் பறையனும், ஏழை சாணானும், ஏழை பிராமணனும் ஒண்ணாச் சேர்ந்தா ஊரையே மாத்திப்பிடலாம். அம்மாடி என் புத்தி ஏன் இப்படிப் போவுது?...... எந்த ஜாதி சந்தைக்குப் போனால் நமக்கென்ன....?

இப்படி சமூக உணர்வுக்கும், தனது பலவீனமான நிலைமைக்கும் இடையே ஊசலாடும் உலகம்மை, பின்னதை வென்று, முன்னதைப் பலப்படுத்திக் கொள்கிறாள்.

மாரிமுத்து நாடார், சட்டாம்பட்டியில் உள்ள பட்டதாரி வாலிபனான லோகுவிற்கு, அழகான பெண்ணான உலகம்மையை