பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 157

காளியம்மன் கோவிலைப் பார்த்து, அடியே... காளி... இவ்வளவு நடந்த பிறகும் ஒனக்கு. அங்க இருக்க என்னடி யோக்கியத இருக்கு? என்று கத்திக்கொண்டே, நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள போலீஸ் நிலையத்தைப் பார்த்துப் போகிறாள்.

ஆரம்பத்தில் அதட்டிப் பேசிய தலைமைக் கான்ஸ்டபிள், உலகம்மையின் ஆவேசத்திற்குப் பயந்து, குட்டாம்பட்டி வருகிறார். அவரைக் கண்டதும், கோடு அழிக்கப்படுகிறது. கான்ஸ்டபிளுக்கு ‘கலர் பாட்டல் உடைக்கப்படுகிறது.

மாயாண்டியே குடித்து விட்டு கோடு கிழித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. உலகம்மை, சுற்றிலும் நின்ற கிராம மக்களைப் பார்த்து, போலீஸாரிடம் உண்மையைச் சொல்லும்படி மன்றாடுகிறாள். எல்லா வாய்களும், நோய் கண்டது போல் மூடுகின்றன.

தலைமை கான்ஸ்டபின் அரசியல் பின்னணியும், ஆள்பலமும் கொண்ட மாரிமுத்து நாடாருடன் சேர்ந்து கொண்டு, மாயாண்டியை குடித்துக் கலாட்டா செய்தான் என கைது செய்து கொண்டு போகிறார்.

உலகம்மை ‘அய்யா அய்யா என்று முனங்கிக் கொண்டே, பின் தொடர்கிறாள். ஊர் ஜனங்களோ, வேடிக்கைப் பார்க்கிறார்கள். அதுவும், அவனைப் பின் தொடர்ந்து சென்று வேடிக்கை பார்க்கிறார்கள்.

புதுமைப் பெண்ணாய்...

உலகம்மையால் பொறுக்க முடியவில்லை. வெடிக்கிறாள். நாடி நரம்பெங்கும் வியாபித்திருந்த தைரிய அணுக்கள் ஒன்றிரண்டாய், இரண்டு நான்காய், நான்கு பதினாறாக, பதினாறு இருநூற்று ஐம்பத்தாறாய் பிளந்து, அடக்க முடியாத அணு பிளப்பாகி’ அணு குண்டை அடியில் வைத்திருப்பவள் போல் கத்துகிறாள்.

“நீங்கள்ளாம் மனுஷங்களாய்யா. பொட்டையிலயும் கேடு கெட்ட பொட்ட பயலுவ.... ஏன் பின்னால வாரீக? உள்ளதைச் சொல்ல பயப்படுற நீங்களெல்லாம் எதுக்காவ மனுஷன்னு பூலோகத்துல லாந்தனும்? போங்கய்யா. ஒங்க வேலையைப் பாத்துக்கிட்டு...’

மாயாண் டி லாக்கப்பில் அடைபடுகிறார். வழியில் சென்னை க்குப் போகும் லோ கு வைப் பார்த்தாலும், உலகம்மை-அவன் கேட்டும்-தன் கஷ்டத்தைக் கூறவில்லை.