பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! 64 பதிவு பெறாத படைப்பாளிகள்

இந்தப் படைப்பை படியுங்கள் என்றுதான் சொல்ல முடிகிறதே தவிர, இப்படி நயங்கள் உள்ளன என்று என்னால் பரிந்துரைக்க இயலவில்லை. காரணம் ஒவ்வொரு வரியுமே ஒவ்வொரு விடுதலை விரும்பியின் உயிர்த் துடிப்பு.... ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு விடுதலை விரும்பியின் விடாமுயற்சிக்கு உரைகல்....

இந்தப் படைப்பை படிப்பவர்கள், கை, கால்களை இழந்தும், கண்கள், மூக்குகளை இழந்தும் குற்றுயிராய் வாழும் தொழுநோயாளிகள் இழக்காத மனித நேயத்தையும், சிறைச்சாலைக்குள் நடைபெறும் கொலை, கொள்ளை, லஞ்ச லாவண்யங்களையும் கிட்டத்தட்ட நம்மூரில் நடப்பது போலவே சித்தரிக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக பட்டாம்பூச்சி’ பட்டபாட்டை நினைக்கும்போது, நாம் படும் பாடு ஒரு பாடே இல்லை என்பது புரியும்.

இந்த உண்மைக்கதையை இருபத்தோரு ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் மொழி பெயர்த்து, அது குமுதத்தில் வளியாகியது. இதை நூலாகக் கொண்டு வந்த ‘மணிவாசகர் திப்பகத்தின் உரிமையாளரும், பிரபல இலக்கியவாதியுமான டாக்டர் ச. மெய்யப்பன் மூலமா’, ‘மொழி பெயர்ப்பா என்று ஐயுறும் வரையில் இந்த உயிரோவியத்தை வழங்கிய அவருக்குத் (ரா.கி. ரங்கராஜன்) தமிழுலகம் என்றும் கடமைப்பட்டிருக்கிறது என்கிறார். இதே கருத்தை சுஜாதாவம் தமது முன்னுரையில் சொல்லி இருக்கிறார்.

இந்த உரைநடைக் காப்பியத்தை தமிழுக்கு அப்படியே தந்த ரா.கி. ரங்கராஜன் அவர்களின், மொழிபெயர்ப்பு திறனை நமது இலக்கிய உலகம் இன்றும் அங்கீகரிக்கவில்லை. தொ.மு. சிதம்ப ரகுநாதன், த.நா. குமாரசாமி, தா.ந. சேனாதிபதி, சரஸ்வதி ராம்நாத், விஜயலட்சுமி கந்தரராசன் போன்ற மொழி பெயர்ப்பாளர் வரிசையில் குறிப்பிடப்பட வேண்டியவர் இந்த ரங்கராஜன். இப்படி ஒரு மொழி பெயர்ப்பை நான் படித்ததில்லை வானொலியில் மொழி பெயப்பிலேயே மூழ்கிப் போன என்னை மிகவும் சிறிதாக்கிவிட்டார் இந்த ரா.கி.ர. ஆனாலும் இவர் நம்மவர்களால் கண்டு கொள்ள ப் படவேயில்லை. சென்னையில் ‘சாகித்ய அகாதமி நடத்திய மொழி பெயர்ப்பு கருத்தரங்கிலும் இவர் புறக்கணிக்கப்பட்டார். இதுமட்டுமல்லாமல், இவர் எழுதிய ‘கையில்லாத பொம்மை என்ற நாவல் திறமை இருந்தும் டிகிரி வாங்காததால் சிரமத்துக்குள்ளாகும் ஒரு இளைஞனைப் பற்றிய கதை.