பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 1.65

சுஜாதாவிற்கு முன்பே தமிழில் நவீனத்துவத்தை கொண்டு வந்தவர் ரா.கி.ரா என்று நான் அந்தக் காலத்திலேயே எனது ‘குற்றம் பார்க்கில் சிறுகதையில் குறிப்பிட்டிருக்கிறேன்.

இவரைப்போல் இலக்கியப் பதிவுபெறாத ஒரு அற்புதமான எழுத்தாளர் ஜ.ரா. சுந்தரேசன். இவரது அப்புசாமி சீதாப்பாட்டி’ சிறுகதைகளுக்கும், நாவல்களுக்கும், தமிழ் இலக்கியத்தில் தனி வரலாற்றில் பதிவு செய்யப்படவேண்டியவை. ஆனால், குமுதம் பத்திரிகையில் எழுதினார் என்கிற ஒரே காரணத்திற்காகவே இவர் இலக்கியப்பதிவு பெறாமல் இருக்கிறார். இவரது நடை எளிமையாகவும். அதேசயமம் நையாண்டியாகவும் இருக்கும். மேஜிக்கல் ரியலிசம் என்று சொல்கிறார்களே-மாந்திரீக யதார்த்தம், அதை அந்தக் காலத்திலேயே நெருங்கிநெருங்கி வருகிறாள்’ என்ற நாவலில் கொண்டுவந்தவர் சுந்தரேசன். இவரைப்போல் சண்முகசுந்தரம் என்ற புனிதன், சுந்தர பாகவதர் என்ற பெயரிலும், பல அற்புதமான கதைகளை சிலேட நடையில் எழுதியவர். இவர்களது குமுதக் குருநாதரான எஸ்.ஏ.பி. அவர்களின் ‘காதலென்னும் தீவினிலே’, ‘சக்தி’ போன்ற படைப்புகளும் மிகவும் ஆழமானவை, தரமானவை. இவரது படைப்புகளும் குமுதம் ஆசிரியர் என்கிற ஒரே காரணத்திற்காக பதிவு செய்யப்படவில்லை. தாசில்தார் நாய் செத்தால் துக்கம் விசாரிக்க வருகிறவர்கள் அதே தாசில்தார் செத்தால் வராமாட்டார்கள் என்ற பழமொழிக்கு ஏற்ப இவர் மரணத்தின் போது இவரால் ஊக்கு விக்கப்பட்ட பல படைப்பாளிகளை நான் பார்க்கவில்லை.

இதேபோல், அரக்கத்தனமாக நிராகரிக்கப்படுபவர் அசுரத்தனமாக எழுதும் தாமரை மணாளன். புதுமைப்பித்தனுக்கு பிறகு இவரைப்போல் அங்கதச் சுவையோடு எழுதுவதற்கு, இப்போதுகூட ஆளில்லை. வணிகப் பத்திரிகைகளுக்காக சிலசமயம் வளைந்து கொடுத்தாலும், இவரது நடையில் எள்ளல், துள்ளல், இலக்கியநயம், யதார்த்தம், புரட்சி ஆகியவை உள்ளடங்கியிருக்கும். எல்லாத்துறைகளிலும் தன் எழுத்து வல்லமையை நிரூபிப்பவர். இப்போதுகூட ‘வாசுகி'யில் இவர் எழுதும் கடைசி பக்க உள்ளத்தை கிள்ளியவர்கள் அற்புதமான சித்தரிப்புகள்.

நெல்லை பூமியின் மண்வாசனையை அப்படியே நுகர வைப்பவர் எழுத்தாளர் தாமரை செந்தூர் பாண்டி. இவரது குடிப்பிறப்பு என்ற சிறுகதைத் தொகுப்பு லில்லி சிகாமணி அறக்கட்டளை பரிசையும், தென்னக பண்பாட்டு இயக்கத்தின் பரிசையும் பெற்றவை. தமிழக அரசு இவரது படைப்புகளை எல்லா பள்ளி கல்வி, நூலகங்களிலும் வைக்கவேண்டுமென்று ஆணையிட்டிருக்கிறது. படிக்க மனமிருந்தும் முடியாமல் போன