பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 66 பதிவு பெறாத படைப்பாளிகள்

சிறுவர்-சிறுமிகளையும் அப்படி அவர்களை படிக்க வைக்க இயலாத ஏழைப் பெற்றோர்களையும் இந்த தொகுப்பில் படிக்கும்போது கண் கலங்காதவர்கள் கல்நெஞ்சுக்காரர் களாகத்தான் இருப்பார்கள். இப்போது இவர் கொண்டு வந்திருக்கும் இதோ ஒரு மனுவி என்ற சிறுகதையும் சமூகப் பொறுப்பு வாய்ந்த போராளித்தன்மை கொண்டவை.

எழுத்தாளர் சிவசங்கரி அவர்களின், நான்கு தொகுதிகளைக் கொண்ட “இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு” என்ற முயற்சி ஒரு மாபெரும் இலக்கிய வேள்வி. இந்த முயற்சியை பிறமொழிப் பத்திரிகைகள் பாராட்டி பக்கம் பக்கமாக எழுதுகின்றன. ஆனால் இங்கே காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, இது கண்டுக்கப்படவில்லை. மூன்று தலைமுறைகளை கொண்டு இவர் எழுதிய பாலங்கள் என்ற நாவல் தமிழில் வெளியான மிகச் சிறந்த பட்ைபு.

இதேபோல் ஜே.எம். சாலி, ஒரு அற்புதமான எழுத்தாளர். இஸ்லாமிய மக்களின் பிரச்சினைகளை யதார்த்தமாகவும், மனித நேயமாகவும் சித்தரித்ததோடு பொது பிரச்சினைகள் குறித்தும், எழுதியவர். அருமையான தமிழ்நடைக்காரர். இவரை போன்றவர் இனியவனும், இலக்கிய வீதியில் பல எழுத்தாளர்களை வளர்த்து விட்டவர். தரமான கதைகள் எழுதியவர்.

போதாக்குறைக்கு, பதிப்பகத்தார் தாங்கள் பதிப்பிக்கும் எழுத்தாளர்களைப் பற்றி வானளாவ துதி பாடுகிறார்கள். இதே துதியை ராயல்டியில் காட்டினால் நன்றாக இருக்கும்.

இப்படி ரோஜாகுமார், தேனி சீருடையான், அல்லி உதயன், ஜீவகாருண்யன், ராஜாமணி, ஜனநேசன், தி.சு. வேலாயுதம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். மேலே குறிப்பிட்டவை அனைத்தும் உடனடியாய் நினைவுக்கு வந்த பெயர்கள். இதேபோன்ற படைப்பாளிகள் விடுபட்டுப்போயிருந்தால் என்னை மன்னிக்க வேண்டும். “ஒருபானை சோற்றுக்கு ஒரு அகப்பை சோற்றைத்தான்” காட்டியிருக்கிறேன். என்றாலும்

ஒரு எழுத்தாளர் திராவிட இயக்கத்தை நாலாந்திர இலக்கியம் என்கிறார். அதில் கலைஞரைப் பற்றி ஒருவார்த்தை இல்லை. பிறகு அதே கலைஞரை கணையாழியில் புகழ்ந்து தள்ளுகிறார். ஒரு எழுத்தாளர் இன்னொரு எழுத்தாளரைப்பற்றி திரைப்படம் எடுக்கிறார். உடனே, அந்த எழுத்தாளர் இவருக்கு ‘சாகித்ய அகாதமி பரிசு வாங்கிக் கொடுக்கிறார். ஒருவர், சாகித்ய விருது பெற்ற படைப்பாளியை நேர்காணல் தத்துவத்தையும் மீறி வானளாவ புகழ்கிறார். உடனே, புகழப்பட்டவர், புகழ்ந்தவரைப்பற்றி ஒரு திரைப்படம் எடுக்கிறார்.