பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 169

வந்தது. ஆனாலும், இலக்கிய விமர்சகர்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொள்பவர்கள் ஒதுக்குகிற அளவுக்கு இவர்கள் சோடை போனவர்கள் அல்ல. இவர்களின் படைப்புகளைப் படிக்காமல் எழுதப்படும் எந்த இலக்கிய வரலாறும் முழுமையானதாக இருக்க முடியாது.

மூவர் தாக்கம்

தந்தை பெரியார் தமிழை பகுத்தறிவாக்கி கொண்டிருந்தபோது பேரறிஞர் அண்ணாவும், கலைஞர் கருணாநிதியும் தமிழை வீதிக்கி கொண்டு வந்தார்கள். ஒவ்வொரு சாதாரண தமிழனின் வாயிலும் தமிழ் அருவிபோல் ஆவதற்கு இவர்களே காரணம். அண்ணாவின் ‘ரங்கோன் ராதாவில் வருவதுபோல் ஒரு பெண்ணுக்கு பைத்தியப்பட்டம் சூட்டி அவளை ஆண்டுக்கணக்கில் ஒரு அறையில் அடைத்துப்போட்ட கொடுர நிகழ்ச்சி அண்மையில் செய்தியாக வந்தது. அண்ணாவின், பணத்தோட்டம், நல்லதம்பி, இன்றைக்கும் பொருத்தி பார்க்கக்கூடிய படைப்புக்கள், கலைஞரின், பொன்னர் சங்கரும், தென்பாண்டி சிங்கமும், ஏராளமான சிறுகதைகளும் இன்றைய யதாத்தங்களாகவும் இருக்கின்றன. இந்த இருவரின் தமிழ்வீச்சு வடமொழியால் அமுக்கப்பட்டிருந்த தமிழை மீட்டியது. இது இலக்கியப்பணி இல்லையென்றால் இது இலக்கிய வரலாற்றில் இடம்பெறக்கூடியது அல்ல என்று சாகித்ய அகாதமியின் முன்னைய அறிவுரைக்குழு முடிவெடுத்தது ஒரு மூடத்தனமான செயல்.

என்றாலும், அண்ணா, கலைஞர் என்ற ஆலமரங்களுக்கு அடிவாரத்தில் தோன்றிய திராவிட படைப்பிலக்கியங்கள் பேசப்படாமல் போயிற்று. இதற்கு பாதிக்காரணம் அண்ணாவையும், கலைஞரையும் முன்னெடுத்ததுபோல், இவர்களை கொண்டு செலுத்த ஆளில்லை. அதோடு திராவிட இயக்க எதிரிகளின் கையில் இலக்கிய வரலாற்றை தீர்மானிக்கும் பொறுப்பு இருந்ததும் ஒரு காரணம். மேல்நாடுகளில் தரமான கட்டுரைகளும், இலக்கியங்களாக கருதப்படுகின்றன. இங்கேதான் சமூகப் பிரக்ஞை ட ைட ப் புக ள் &n L- , க ட் டு ைரத் த ன மாக விமர்சிக்கப்படுகின்றன.

அண்ணா வழிச் சிறுகதைகள்

இந்த இயக்கத்தில் ஊறித் திளைத்த ப. புகழேந்தி தொகுத்த ‘அண்ணா வழிச் சிறுகதை'களை படிக்க நேர்ந்தது. இவரும் தமது முன்னுரையில் “தெரிந்தோ, தெரியாமலோ ஒரு எல்லைக் கோட்டினுள் உலவும் ஒரு குறிப்பிட்ட சார்பு எழுத்தாளர்களின் கதைகளே தொகுக்கப்பட்டுள்ளன” என்று ஆதங்கப்பட்டுள்ளார்.