பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 72 திராவிட இயக்கப் படைப்பாளிகள்

சிந்தனையாளர்கள், தங்களது சக்தியை இலக்கிய வடிவுகளாகவும் ஆக்க முடியும் என்பதற்கும், சிறுகதை எழுதுவதற்கு என்று யாரும் தனியாகப் பிறக்க வேண்டியதில்லை என்பதற்கும், இந்தக்கதை ஒரு உதாரணம். இந்த இரா. செழியனையே சிறுகதை வரலாற்றில் பேசப்படவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

மாரி என்ற சேரிவாசி, கர்ணம் கை தவறி கீழே போட்டு, தொலைக்கும் அந்தக் காலத்து நாலனாவை எடுத்துத் திரும்பக் கொடுக்கும் அளவுக்கு நேர்மையானவன். ஆனால் அவனுக்கு ஒரு சோதனை. ஒரு நாயின் வாயில் வெள்ளையாகத் தெரிவதை வெள்ளி டப்பியாக நினைத்து துரத்துகிறான். புதர், புல்தரை, சுடுமணல், கல், முள் ஒன்றையும் பார்க்காமல் ஒடுகிறான். தாக்குப்பிடிக்க முடியாத நாயும், வாயிலுள்ள தேங்காய்த் துண்டைத் துப்பிவிட்டு ஓடிவிடுகிறது. அவனும் தேங்காயை நாயின் பற்கள் பதிந்த இடத்தைக் கடித்துத் துப்பிவிட்டு மீதியை வாய்க்குள் போட்டுக் கொள்கிறான். இதைப் பார்த்த குருக்கள் ஐயர், அக்கிரகாரத்திற்குப் பின்புறமாக வரவேண்டிய சேரிக்காரன், முன்புறமாக-அதன் மத்திக்கே வந்து விட்டதைக் கண்டு கத்துகிறார். தேங்காய் திருடிப் பட்டமும் சுமத்துகிறார். அம்பலக்காராரை வைத்து அடிக்க வைக்கிறார். கூக்குரலைக் கேட்டு ஐயர் அசையாது நின்றார். புளிய மிளாறோ அசைந்தபடி இருந்தது என்று செழியன் விளக்கும் விதமே கண்களில் நீரை வரவழைக்கும். இப்படித் திருட்டுப் பட்டம் சூட்டப்பட்ட மாரியை அனைவருமே திருடன் என்கிறார்கள். அவனும், முற்றும் நனைந்தவர்க்கு ஈரமில்லை என்பதுபோல் திருடத் துவங்கி விடுகிறான். மனைவியிடம் ராஜாடி ராஜா என்கிறான். இத்தகைய பழக்க வழக்கத்திற்கு புதிதான அவன் மனைவி, “நீ திருடும்போது யாரும் பார்த்தால் தெரியும்-ராஜாபாடு” என்கிறாள். உடனே நமது மாரி,

“இந்த ராஜாபாடு மட்டுந்தானா? நெசமாலும் ராஜா கூடத்தாண்டி சண்டையிலே தோத்துப்போனா, இன்னொரு ராஜா கையில் அடிபடுவான்,” என்று சொல்லிவிட்டுச் சிரிப்பாய்ச் சிரிப்பான். கதை என்றால் இதுதான் கதை. “மழையை லட்சியம் செய்யாத எருமை போல அலைந்தேன்”. அடுப்பில் கஞ்சி கொதிக்கும் சத்தம் அஞ்சலைக்கு இன்னிசையாக இருந்தது’ போன்ற உதாரணங்கள் தனித்துவம் பெறுகின்றன; இப்போது அரசியல் ஒரங்கட்டப்பட்ட இரா. செழியன், அதுவும் நன்மைக்கே என்று நினைத்து இலக்கியத்திற்குத் திரும்ப வேண்டும். கண்டவர்கள் எல்லாம் இன்றைய அரசியலை யானை பார்த்த எவனோ போல கேளிக்கையாகச் சித்தரிக்கும் இந்தக்காலத்தில்,