பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 74 திராவிட இயக்கப் படைப்பாளிகள்

பாண்டிய மன்னனால், அபிராமி என்ற ஆரணங்கு ஏற்கனவே சந்நிதானங்களின் கண் பார்வைக்குத் தப்பித்து வந்த அந்தப் பெண்ணழகி எப்படி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள் என்பதே கதை. ஆனால், இளஞ்சேரன் அதைச் சொன்ன விதமோ தனிப்பாணி. எந்த எழுத்தாளராலும் காப்பி அடிக்க முடியாத நடை இளைய தம்பிரான், சம்பங்கியிடம் சொல்வது போலவும், பெரிய தம்பிரான் இளைய தம்பிரானிடம் சொல்வது போலவும், இருவரிடமும் சம்பங்கி சொல்வது போலவும் கதை பின்னல் பின்னலாய்ப் பின்னப்பட்டு ஒரு மோகன வடிவம் பெறுகிறது. இடையிடையே அடைப்புக் குறிக்குள், பேசுபவர், பேசப்படுபவரிடம், அவருக்குத் தெரியாமல் வைத்திருக்கும் அபிப்பிராயம் அழகிய முறையில் சித்தரிக்கப்படுகிறது.

மூழ்கிப்போன சேகரன்

தெய்வத் திருப்பணிகளையும்; தரும நீதிகளையும் சுல்தான்கள் பிரியாணியாக்கிச் சாப்பிட்டு விட்டார்கள் என்ற வாசகமும், கழுத்திலிருந்த நகக்குறியை மறைக்க பிணத்தின்மீது குங்குமத்தைப் பூசியவர்தானே நீர்?”, “கிளைகளிலிருந்து வேர்கள் இறங்கிய மாதிரி எல்லா மரங்களிலும் பிணங்கள் தொங்குகின்றன என்ற உதாரணமும், விக்கிரகங்கள் புதைந்த இடத்தைக்காட்டி விடாதீர்கள். அவ்வளவும் சொக்கத் தங்கத்தில் செய்த விக்கிரகங்கள்” என்ற நையாண்டியும் இந்த சிறுகதையை இலக்கியத்துள் இலக்கியமாக்கி விடுகிறது. ஆனால், அந்த பரிதாகபரமான இளஞ்சேரன், எந்த இயக்கத்தில் தோன்றினாரோ அந்த இயக்கத்தாலேயே சொல்லப்படவில்லை. இவர், சமூக பிரக்ஞை கொண்ட ஒரு புதுமைப்பித்தன். சாமான்யர்களின் வழிகாட்டி. ஆனாலும் இவர் இலக்கியத்திலிருந்து ஒரு வழி செய்யப்பட்டு விட்டார்.

திராவிட இயக்கத்தில் சிறுகதை மன்னன் என்று சொல்லப் படுகிறவர் அது டி.கே. சீனிவாசன். இதைவிட்டு விட்டு, அவருக்குத் தத்துவ மேதை என்று சம்பந்தமில்லாத ஒரு பட்டத்தைச்சூட்டி, அதில் அவரும் மயங்கி, சிறுகதையை விட்டுவிட்டார். இதனால் அவருக்கு நஷ்டமோ என்னமோ, சிறுகதை உலகிற்கே நஷ்டம்தான். இவரது ஆடும் மாடும் மிகச்சிறந்த நாவல். ‘பொன்னி இலக்கிய இதழில் பல சிறுகதைகளை எழுதியவர். இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள இவரது துன்பக்கதை ஒரு காதலையும், கூடவே பொருந்தாத திருமணத்தையும் உள்ளடக்கியது. நான் என்று தொடங்கி எழுதப்படும் பெரும்பாலான கதைகளில் எப்படியோ சோகத்தின் சாயல் படிந்து விடுகிறது என்று