பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 1 75

சுயசரிதையாகக் கதையைத் துவக்கும் இவர், இந்த நான் தந்தையால், தாயின் ஊக்குவிப்போடு, அடிக்கப்படுவதைக் கண்டு நான் பேய்க்கும் பிடாரிக்கும் பிள்ளையாகப் பிறந்திருப்பேனோ’ என்று சொல்ல வைப்பது நெஞ்சை நெகிழச் செய்கிறது.

இளமையிலேயே அவருடன் பழகிய சக்கு, அவர் தந்தையிடம் அடிபடும் போதெல்லாம் வலிச்சுதா என்று கேட்கிறாள். பிறகு ஒரு கிழவனுக்கு வாழ்க்கைப்பட்டு வாழ்க்கையைக் சருகாக்கிக் கொள்கிறாள். அப்போது அவளிடம் உரிமையோடு, சரசமாடப் போன, நானை அவள் அடிக்கிறாள். கன்னத்தில் அறைந்த கையோடு வீட்டை விட்டு வெளியேறச் சொல்லுகிறாள். வலிக்குதா என்று கேட்கவில்லை. இதுதான் கதை. இதைப் படிக்கும்போது நமக்கே வலிக்காதா? சரளமாக நடையில் தனித்துவமான கருத்துக்களைத் தெரியப்படுத்தியவர் டி.கே. சீனிவாசன்.

தில்லை மறை முதல்வன்

ஆயுதப்புரட்சி இலக்கியங்களெல்லாம் அங்கீகரிக்கப்பட்டு வரும் இன்றைய கால கட்டத்திற்கு முன்பே, அப்படி ஒரு கதையை எழுதியவர் தில்லை மறை முதல்வன். திராவிடன் இதழில், ‘சங்கப் பலகை என்ற பெயரில், பல கருத்துக்களைச் சிறப்புற எழுதிய எழுத்தாளர் புகழேந்தியால் அறிமுகப்படுத்தப்படும் இவர், குடும்பத்தின் மீது பற்று பாசம் இருந்தாலும், அதற்கு பயன்பட முடியாமல் போன ஒரு புரட்சிவாதியையும், பிள்ளை பெண்டு என்று முடங்கிப்போன அவனது நண்பனையும் சித்தரிக்கும் சீரிய கதை. குமாரசாமி என்ற புரட்சிவாதி, மனைவியையும் பெற்றோரையும் விட்டுவிட்டுத், தலைமறைவாகி நண்பனிடம் வருகிறான்.

அந்த நண்பனின் அன்பான வேண்டுகோளின்படி, மீண்டும் குடும்பத்திற்குச் செல்ல முயற்சிக்கிறான். அதற்குள் அவன் ஆந்திராப் பக்கம் வழக்கமான வேலைக்கு போவதென்று முடிவெடுக்கிறான். இறுதியில், நெருப்பின்றி வேள்வி நடத்த முடியாது என்பதை நினைவுபடுத்திக் குடும்பத்தின் வாழ்க்கையை அந்த வேள்வியில் தாரை வார்க்க அவன் தயங்கவில்லை. ஆனால், கல்லூரிக் காலத்தில் அவனோடு புரட்சி வேகம் கொண்டிருந்து நண்பனோ, நெஞ்சில் லட்சிய நெருப்பு கிளம்பாதிருக்க மனைவியின் உடல் நெருப்போடு ஒட்டிக் கொள்கிறான். கல்லூரிக் காலத்தில் லட்சியம் பேசிவிட்டு, பிறகு குடும்ப வாழ்க்கையில் அதை அலட்சியப்படுத்தும் முன்னாள் புரட்சிக் காரர்களுக்கு இது ஒரு அருமையான சவுக்கடி.