பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 76 திராவிட இயக்கப் படைப்பாளிகள்

தென்னரசின் முத்தாயி

எஸ்.எஸ். தென்னரசு, திராவிட நாவலாசிரியர்களில் குறிப்பிடத்தக்கவர் தென் மாவட்டங்களில் நிலவிய, இப்போதும் ஒரளவு நிலவும் ஆவேசப் போக்கையும், அதன் பின்னணியிலுள்ள அன்புப் பிரவாகத்தையும் முத்தாயி என்ற சிறுகதையில் அழகாகச் சித்தரிக்கிறார். இந்தக் கதையில் அந்த மண்ணுக்கே இயல்பாயுள்ள வீரம் ஒளிர்கிறது. காதலுக்காக அனைத்தையும் அலட்சியப்படுத்தும் ஒரு வீராங்கனையின் ஆளுமை அழகாகச் சித்தரிக்கப்படுகிறது.

கருமுயலை திருமணம் செய்து கொள்கிறாள் முத்தாயி. இது அவள் அண்ணன் செந்தட்டிக்குப் பிடிக்கவில்லை. கருமுயல் கொலை செய்யப்படுகிறான். செந்தட்டி சிறைக்குச் சென்று பதினான்காண்டுகள் கழித்து, தான் கொலை செய்ததாகக் கோர்ட்டில் சாட்சியம் சொன்ன தங்கையின் தலையறுக்கச் சபதமிடுகிறான். ஆனால், அவள் திருமணம் செய்துகொண்ட வைரஊசி, தானதான கருமுயலைக கொன்றதாக கோல்லுகிறான். இந்தக் கதையில் மண்வாசனைப் பெயர்கள். அதோடு கருமுயலைக் காதலித்துக் கைப்பிடித்த முத்தாயி, அவன் கொலையுண்டதும், வைரஊசியைத் திருமணம் செய்து கொள்ளும் யதார்த்தமான முடிவு. இப்படி மாறுபட்ட கதையைத் தென்னரசால் மட்டுமே சொல்ல முடியும்.

புகழேந்தியின் உறவு

பேராசிரியர்கள் கதை எழுத வரக்கூடாது என்பதற்கு மிகச்சிறந்த சிந்தனையாளரான பேராசிரியர் நா. பாண்டுரங்கன் எழுதிய அரசியல் என்ற சிறுகதை ஒரு உதாரணம். குடும்பத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒருவன், தந்தையால் விரட்டியடிக்கப்பட்ட நான்காவது பிள்ளை, எப்படி அரசனானான் என்பதே சிறுகதை. இதேபோல், தொகுப்பாசிரியர் ப. புகழேந்தி எழுதிய உறவு’ ஒரு உறவைக் கொச்சைப்படுத்தினாலும், சிறிது வித்தியாசமானது. ஆண்மையிழந்த ஒருவனுக்கு மனைவியான ஏழைப் பெண் மீனாட்சி, மாமனார் மூலம் குழந்தை பெற்று இறுதியில் அவர் இறந்த பிறகு, அவருக்குத் தான் பெற்ற பிள்ளைகளைப் பேர்ல் தனது கணவனையும் ஒரு பிள்ளையாக நினைக்கிறாள் என்பதே . #:  : :* fg#:#: சித்தரிக்கப்படுகிறார். என்றாலும், சிறுகதை என்பது குறிப்பிட்ட ஒரு சமூகக் கோட்பாட்டுக்குள் இயங்கலாகாது என்று எடுத்துக் கொண்டால் இது ஒரு நல்ல கதை.