பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 177

முரசொலிமாறனின் வால் நட்சத்திரம்

முரசொலி மாறன் வால் நட்சத்திரம்’ என்ற சிறுகதையை எழுதியிருக்கிறார். நல்ல நடை, இயல்பான விறு விறுப்பு. ‘காதல் வராத கதைகள் சோபிப்பதே இல்லை என்பது அவரது பார்வை. புரட்சி வசியன் என்ற எழுத்தாளன் உயிரிழக்க அவனுக்கு அனுதாபக் கூட்டம் நடைபெறுகிறது. அவன் ஏற்படுத்திய சமூகத் தாக்கங்கள் பற்றி பத்திரிகை ஆசிரியர் கனவான் கருப்பையா முதலியார் பொரிந்து தள்ளுகிறார். அவரது பத்திரிகையிலேயே இதே புரட்சி வசியன் இன்பப்பித்தன்’ என்ற பெயரில், “நிக்கல் நாணயத்திற்கு நிர்வான அழகிகள்’ என்பது மாதிரியான தொடர்கதைகளையும் எழுதியிருப்பது அவருக்கு மட்டுமே தெரியும். இப்படிப் புரட்சி படைப்பாளியாகவும், செக்ஸ் மன்னனாகவும் ரெட்டை வேடம் போடுகிறவனைப் பற்றியும், அப்படி அவனைப் போட வைக்கிற பத்திரிகை ஆசிரியரைப் பற்றியும், இப்படிப் போடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பது மாதிரி, சிறநத எழுத்தாளரான முரசொலி மாறன் சொல்லியிருப்பது சிறப்பாக இல்லை. ஆனாலும், வியாபாரப் பத்திரிகை ஆசிரியர்களின் பேச்சுக்குக் கட்டுப்படாமலும், அந்தப் பத்திரிகைகளுக்கு செக்ஸ் தீனி போடாமலும், சுயமரியாதையோடு எழுதும் ஒரு சில எழுத்தாளர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்பது முரசொலி மாறன் அவர்களுக்கும் தெரியும். ஆலடி அருணாவும், டாக்டர் தயானந்தன் பிரான்ஸிஸும் பல்வேறு திராவிட இயக்கக் கதைகளை எழுதியவர்கள்.

திராவிட இயக்கக் கவிஞர்கள்

நான் கல்லூரிக் காலத்தில் தேசியவாதியாக இருந்தபோது பல்வேறு தி.மு.க. வாசக சாலைகளில் நம்நாடு, முரசொலி, இனமுழக்கம், தென்றல், திராவிட நாடு போன்ற எண்ணற்ற இயக்கப் பத்திரிகைகளை பொறாமையோடும், பொச்சரிப்போடும் படித்தவன். கவிக் கொண்டல் மா. செங்குட்டுவன், கா. வேழவேந்தன், பொன்னிவளவன், மதியழகனைப் பற்றி அண்ணா எழுதிய கவிதை, அண்ணா இறந்தபோது கலைஞர் எழுதிய கவிதை, ஆகியவை எனக்கு மிகவும் பிடிக்கும். தேசிய எரிச்சலோடு இந்த திராவிடக் கவிதைகளை ரசிப்பேன். தென்றலில் கண்ணதாசன் ஈற்றடி கொடுத்து வெண்பா எழுத வைத்தது சிறப்புக்குரிய செயல். கவிஞர் செங்குட்டுவன் கவிக்கொண்டல்

இவர்கள் அல்லாது திராவிட இயக்கத்தின் பிற கவிஞர்களான பாரதிதாசன், கண்ணதாசன், சுரதா, நா. காமராசன், சாலப்

4-12, .