பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 நான் கண்ட காமராசர்-அண்ணா-பெரியார்

எனக்கு அழுகை வந்தது. அந்த வயதிலேயே சிறப்பாகப் படித்து முன்னேற வேண்டும் என்று என்னுள்ளே இருந்த கனவு, பாதியிலேயே பறிபோகிறதே என்று வெம்பி வேதனைப்பட்டேன்.

காமராசர் முதல்வரானதால்...

நல்லவேளையாக ஒருநாள் எங்கள் ஆசிரியர் வீட்டுக்கு வந்து, இனிமேல் மாணவர்கள் வழக்கம்போல் காலையிலும், மாலையிலும் பள்ளிக்கூடம் வரலாம் என்று தெரிவித்தார். பிறகுதான் எனக்கு மெல்லமெல்ல புரிந்தது. மூதலமைச்சரான மூதறிஞர் இராஜாஜி கொண்டு வந்த கல்வித் திட்டத்தால், பள்ளிக் கூடங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட என்னைப் போன்ற ஏழை மாணவர்கள், பெருந்தலைவர் காமராசர் முதலமைச்சரானதால் மீண்டும் மறு வாழ்வுப் பெற்றார்கள் என்பது புரியத் துவங்கியது. அதிலிருந்தே காமராசர், என் கல்விக் கண்களைத் திறந்த கடவுளாகத் தென்பட்டார்.

இலுப்பம் பூவான நான்.

எடுத்த எடுப்பிலேயே என் மனதைக் கவர்ந்த பெருந் தலைவரின் காங்கிரசு இயக்கத்தில் என்னை அறியாமலேயே ஒரு பற்று ஏற்பட்டது. மாணவர்களின் நிறுத்தப்பட்ட படிப்பை நீடிக்கச் செய்த அவரை படியாதவ்ர்பாமரர் என்று பலர் கிண்டலும் கேலியும் செய்தபோது, எனக்கு அவரிடம் ஒர் அனுதாபம் ஏற்பட்டது.

கல்லூரிக் காலத்தில் காமராசரை ஆதரிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு காங்கிரசுக் கட்சியில் சேர்ந்தேன். “இல்லாத ஊருக்கு இலுப்பம் பூ சர்க்கரை” என்பதுபோல், நான் அந்தக் கட்சியின் முக்கியப் பேச்சாளர்களில் ஒருவரானேன். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஒரு மாநாட்டில், என்பேச்சை பல்லாயிரக் கணக்கான மக்கள் அடிக்க டி கைதட்டி வரவேற்றார்கள். அப்போது பெருந்தலைவர் என்னை உற்றுப்பார்த்து மனதுக்குள் குறித்துக் கொண்டார். என்று நினைக்கிறேன். அவர் பேசும்போது என். பேச்சை முன்னுதாரணமாக எடுத்துக்காட்டினார். எனக்கு மெய் சிலிர்த்தது. ஆனாலும் அவரிடம் பேசப் பயம். அவரது செல்வாக்கைப் பயன்படுத்திக் கொள்ளும் திறமையோ, மனமோ எனக்கு இல்லை என்பது இப்போதுதான் எனக்குப் புரிகிறது.

அடிக்கடி சத்தியமூர்த்தி பவனில் அவரைப்பார்க்கும் வாய்ப்பு பலமுறை கிட்டியதுண்டு. சிலரை, எடுத்தேன், கவிழ்த்தேன்