பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 எனது முதல் படைப்பு

எற்பட வேண்டும். “நல்லுணர்வு ஏற்பட்டால் நல்லிலக்கியம், நச்சுணர்வு ஏற்பட்டால் நச்சிலக்கியம்’ என்றார் லியோ டால்ஸ்டாய். இதுதான் படைப்பிலக்கியத்திற்குச் சரியான அளவு கோல் என்று கருதுகிறேன். இந்த அளவின்படி மட்டுமல்ல, மனதில் சட்டென்று நினைவுக்கு வரும்படியும் தோன்றுவது எனது முதல் சிறுகதையான ‘அங்கே கல்யாணம் - இங்கே கலாட்டா” என்ற படைப்புதான். 1974-ம் ஆண்டு இறுதிவாக்கில் இது ஆனந்தவிகடனில் வெளியானது. இந்த சிறுகதைதான் என்னை உடனடி எழுத்தாளனாக்க உதவியது.

இந்த சிறுகதையை எழுதும்போது நான் எழுத்தாளனாக மாறப் போகிறேன் என்று நினைத்ததில்லை. பத்துப்பேரோடு பதினோராவது நபராக ஒரு கதையை எழுதித்தான் பார்ப்போமே என்ற தோரணையில்தான் எழுதினேன். கதையைத் திருப்பி வாங்குவதற்கு தபால் தலைகளைக்கூட இணைக்கவில்லை. அந்தச் சிறுகதையை எந்த சூழலில் எழுதினேன் என்பதை நினைத்துப் பார்க்கும்போது, இதோ இந்தத் தருணத்திலும் இனிமையாக இருக்கிறது.

எழுத்தாளச் சவால்

அப்போது நான், டில்லியில் வானொலி நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். உள்ளூரில் நான் ஏறெடுத்தும் பாராத வாரப் பத்திரிகைகள் அங்கே மிகவும் பிடித்துப் போயின. என்ன எழுதினாலும் தமிழை சுமந்து வருகின்றவை என்ற பாசம். ஆனாலும் இந்த பத்திரிகையில் வெளியான சிறுகதைகள் பெரும்பாலும் பிடிக்கவில்லை. பிடிபடவும் இல்லை. அப்போது டில்லியில் என்னுடன் பணியாற்றியவரும், எனது குடும்பத்தோழருமான செல்வராஜிடம், “ஒரு கதைகூட உருப்படியாக இல்லை” என்று அடிக்கடி அலுத்துக் கொள்வது வழக்கம். அவரும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு, பிறகு பொறுமைக்கு எல்லை கட்ட விரும்பாதவர் போல், “கம்மா குறை சொல்வதில் அர்த்தமில்லை சமுத்திரம் குறை சொல்வது எளிது. எழுதுவதுதான் கடினம். நீங்கள் உண்மையிலேயே இலக்கிய ஆர்வம் உள்ளவராய் இருந்தால், ஒரு கதை எழுதி பத்திரிகையில் வரவழைத்துக் காட்டுங்கள். அதற்குப் பிறகு பிறத்தியார் கதைகளைப் பற்றி விமர்சியுங்கள்” என்றார்.

நண்பரின் பேச்சு என்னுள் ஒரு வேகத்தை ஏற்படுத்தியது. அவர் என் திறமைக்கே சவால் இடுவதுபோல் இருந்தது. ஆரம்பப் பள்ளிக்கூட காலத்தில் வில்லுப் பாட்டாளியாகவும்,