பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 நான் கண்ட காமராசர்-அண்ணா-பெரியார்

‘என் பேரு சமுத்திரங்க’

தெரியும். என்ன சேதி?

‘நான் செங்குன்றத்தில ஆசிரியரா வேலை பார்க்கிறேன். என்னை அநியாயமா ஈக்குவார்பாளையத்துக்கு மாத்திட்டாங்க. நீங்க தான் அத கேன்சல் பண்ணிக் கொடுக்கணும்.’

‘நீ மேல் அதிகாரிகளுக்கு வேலையிலே சேரதுக்கு முன்னால மனுப்போட்டியா?

போட்டேங்க’

மேல் அதிகாரிகளோட உத்தரவுக்குக் கீழ்படிவேன்னு அந்த மனுவில எழுதினியா?

“ஆமாங்க’

மேல் அதிகாரி உத்தரவு போட்டிருக்கான். அவன் சொன்னபடி ஈக்குவார்பாளையத்துக்குப் போ’

‘அப்படியெல்லாம் சொல்லக்கூடாதுங்க”

“நீயே எனக்கு உத்தரவு போடறயா? போ. போ.. அவனவன் வேற எதுக்கலாமோ வருவான் நீ என்னடான்னா.

நான், வெறுமையா வெளியே வந்தேன். அப்போது செய்தியைக் கேள்விப்பட்ட நெல்லை ஜெபமணி அவர்கள், பெருந்தலைவர் கடைசியாகச் சொன்ன சொல்லுக்கு வியாக்கியானம் கொடுத்தார். அதாவது நான் ஐ.ஏ.எஸ், டெப்டி கலெக்டர் ஆகிய பதவிகளுக்காக அவரை அணுக வேண்டும் என்றும், பதவி மாற்றம் போன்ற சில்லறைக் காரியங்களுக்குப் போகக்கூடாது என்றும் பெருந்தலைவர் கருதுவதாகக் கூறினார்.

செங் குன்றத்தில் நான் பள்ளிக்கு சென்றபோது. தலைமையாசிரியர் உட்பட ஒரு பெரிய கூட்டமே என்னை எதிர் பார்த்துக் காத்திருந்தது. என்னை ஈக் குவார் பாளையத்துக்கு மாற்றிய உத்தரவு ரத்து செய்யப்பட்டுவிட்டதாம்.

பயமான பக்தி

நான் பெருந்தலைவரை மானசீகமாக வணங்கினேன். அவருக்கு நேரில்போய் நன்றி செலுத்த வேண்டும் என்ற புத்தி எனக்கு இல்லை டெப்டிக் கலெக்டர் தேர்வில் தேறினாலும், செல்வாக்கால் மட்டுமே தேறக்கூடிய நேர்முகத் தேர்வில் பெருந்தலைவரை அணுகுவதற்கு எனக்கு துணிச்சலும் இல்லை. ஆகையால், புதுதில்லியில் வானொலி நிலையத்தில்