பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 நான் கண்ட காமராசர்-அண்ணா-பெரியார்

நட்சத்திரப் பேச்சாளர். காங்கிரஸ் வேட்பாளர் நடேச முதலி யாருக்கு ஆதரவாகவும், அண்ணாவிற்கு எதிராகவும் தினமும் இரண்டு, மூன்று கூட்டங்களில் பேசுவேன். காஞ்சீபுரம் கல்லூரிக்கு போகும்போதும், வரும்போதும் அவரை அவர் வீட்டுமாடியில் பார்ப்பேன். நூற்றுக்கணக்கான இளைஞர்கள் திரண்டு நின்று வாழ்க போடுவார்கள். அவர் இயல்பாகவே நிற்பார். எளிமையாகப் பார்ப்பார். அன்பின் உயிர்ச்சக்தி அனைத்தும் அவர் முகத்தில் நடனமிடும். மேடைகளில் நான் அவரை அண்ணாத்துரை என்றுதான் அழைப்பேன்.

அண்ணாத்துரை அண்ணாவானது...

ஒருதடவை காங்கிரஸ்காரர்கள் மூன்று கேள்விகளுக்கு பதில்சொல்ல முடியுமா? என்று அவர் ஒரு மேடையில் கேட்டார். வெள்ளைக்காரன் வைத்துவிட்டுப்போன ஸ்டெர்லி ங் நிதியை என்ன செய்தீர்கள்? என்பது முதல் கேள்வி. சுதந்திரத்திற்குப் பிறகு விலைவாசி ஏன் கூடியது? என்பது இரண்டாவது கேள்வி. மூன்றாவது கேள்வி எனக்கு நினைவில்லை. அண்ணாவின் தெருவிலேயே ஒரு கூட்டம். அவர் மாடியில் நின்று உற்றுக் கவனிக்கிறார். நான் பொருளாதாரப்பாட மாணவன். பல புள்ளி விபரங்களோடும், வேடிக்கையாகவும் அவரது கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன்.

மறுநாள் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தி.மு.க பேச்சாளர்கள், அண்ணாவின் முன்னிலையில் என்னை கண்டபடி ஏசியிருக்கிறார்கள். இறுதியாகப் பேசிய அண்ணா, அந்த இளைஞர் நல்லவர், வல்லவர், சிறந்த பேச்சாளர். சேராத இடத்தில் சேர்ந்திருக்கிறார். என்னிடத்தில் இருந்தால், அவரை எங்கேயோ வைத்திருப்பேன். ஆகையால், அவரை திட்டாதீர்கள். அவருக்காக அனு தாப ப் படுங் கள்’ என்று நயம் பட உரைத்திருக்கிறார்.

எனக்கு இந்த செய்தி வந்ததும் கிட்டத்தட்ட நான் நெகிழ்ந்தேன். குற்ற உணர்வில் தவித்தேன். எவ்வளவு பெரிய மனிதர்! எவ்வளவு பெரிய உள்ளம்! ஆனாலும் நான் அவர் பக்கம் போகவில்லை. அதேசமயம் மேடைகளில் அண்ணாத்துரை என்று சொல்லாமல் அறிஞர் அண்ணா என்றே அழைத்தேன்.

கவிஞர் பூ கணேசன் குடும்பநல திட்ட துணை இயக்குநராக இருந்த என் நண்பர். அண்ணாவிற்கு வேண்டியவர். அவரைப்பற்றி சொல்லுக்கு சொல் சொல்லுவார். அண்ணாவின் முன்னிலையில் நாம் இருக்கும்போது நமக்கு எந்த கெட்ட