பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 நான் கண்ட காமராசர்-அண்ணா-பெரியார்

காஞ் சீ புர ம் தி யாகராய கல்லூரி யில் முதல் வ ராய் நி ய மிக் க ப் பட வேண் டு ம் என்று காம ராச ரு க் கு பரிந்துரைத்திருக்கிறார். பல்கலைக்கழக வரலாற்றிலேயே பெரியாரின் முயற்சியால் முதுகலைப்பட்டம் படிக்காத, அதேசமயம் திறமையுள்ள ஒருத்தர் முதல்வராக நியமிக்கப்பட்டது முதுகலைப்பட்ட ஆசிரியர்களுக்கு பிடிக்கவும் இல்லை. பிடிபடவும் இல்லை. தந்தை பெரியார் அந்த முதல்வரிடம் எங்க ள் நால் வரை யு ம் சேர் க் க வேண் டு ம் என்று பரிந்துரைத்திருக்கிறார். உடனே அந்த முதல்வரும் எங்களை சேர்த்துக்கொண்டார். ஒரு கல்வியாண்டில் இரண்டு பருவங்கள் தாண்டி இறுதிப் பருவத்தில் மாணவர்களை அதுவும் வெளியேற்றப்பட்ட மாணவர்களை சேர்ப்பது என்பது மிகப்பெரிய காரியம். இதை எளிதாகச் செய்து எங்கள் கல்வியை காப்பாற்றியவர் தந்தை பெரியார்.

1966-ஆம் ஆண்டு டெல்லி வானொலி நிலையத்தில் வேலையில் சேர்ந்துவிட்டு, 1968-ஆம் ஆண்டு வாக்கில் சென்னைக்கு வருகிறேன். எனது மாணவர் காங்கிரஸ் தோழரும், அப்போதைய சட்டப்பேரவை உறுப்பினருமான தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த க.பா. பழனி அவர்கள் பெரியாருக்கு மிகவும் வேண்டியவர். அப்போது பெரியார் சென்னை பொது மருத்துவமனையில் நோய்வாய்ப்பட்டு அனுமதிக்கப்பட்ட வேளை.

அய்யா. அய்யாவே...

தோழர் பழனி என்னை கூட்டிக்கொண்டு பெரியாரிடம் சென்றார். கட்டிலில் படுத்திருக்கிறார் பெரியார். சோகமே உருவாக அருகே அமர்ந்திருக்கிறார் மணியம்மை அம்மையார். என்னைப் பெரியாரிடம் அறிமுகம் செய்ததும் நான், எப்படி அவர் எனது கல்லூரிப் படிப்பை காப்பாற்றினார் என்று ஒரே மூச்சாக விளக்கினேன். பின்னர், அய்யா கர்ங்கிரஸ் இளைஞன் என்கிற முறையில உங்க கருத்தை எதிர்த்து நான் பிரச்சாரம் செய்திருக்கிறேன். ஆனால், டெல்லி க்கு போனபிறகுதான் உங்க அருமை எனக்குத் தெரிஞ்சது. அதோட ராஜாஜியின் புதிய கல்வித் திட்டத்தை ரத்து செய்த காமராசர் ஒரு கருவி. அதை கையாண்டவர் தாங்கள் என்பதை அறிந்தேன்

‘அய்யா! நீங்களும் காமராசரும் இல்லையானால் நான் இந்நேரம் ஒரு விவசாயியாகி வரப்பு வெட்டுகிறவனை