பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 எழுத்தானி ஊர்வலம்

கலைஞர் கண்ட பூம்பு காரோ அல்லது வள்ளுவர் கோட்டமோ, நான் குறிப்பிடுகிற புதிய வளாகத்திற்கு மாற்றாகாது. தமிழக அரசு இந்த பரிந்துரையை ஏற்று ஆவண செயதால் அது தமிழுக்குப் பெருமை. தமிழனுக்கும் பெருமை. இந்த இரண்டு பெருமைகளும் கலைஞருக்கே போய்ச் சேர வேண்டுமென்பதே என் விருப்பம். கலைஞர் தமிழர்களுக்கு விட்டுச் செல்லும் மிகப் பெரிய இலக்கிய பாரம்பரியமாக இதுவே அமையவேண்டும். இதுவரை, இந்த மலையாள பரிணாமத்தில், தமிழகத்தில் எதுவும் அமைய வில்லை. கலைஞர் இதை ஈடேற்ற வேண்டும்.

நவசக்தி வார இதழ்-1999.