பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 21

நுட்பம் தாங்கள் கட்டியிருக்கும் டைகளில் மட்டுமே இருப்பதுபோல், கலர்கலரான டைகட்டி இடையிடையே ஆங்கில வார்த்தைகளை வலுக்கட்டாயமாகத் திணித்து பல்வேறு மருந்துகளை பரிந்துரைக்கிறாள்கள். இது அல்லாது, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இடையே தீராத வியாதிகளை எல்லாம் தீர்த்து வைக்கும் மருந்து மாத்திரைகள் விளம்பரப்படுத்தப்படுகின்றன. உண்மைதான், இந்த விளம்பர மாத்திரைகளை நம்பி விழுங்குகிறவர்களை இந்த மாத்திரைகள் விழுங்கிவிடுகின்றன. இதனால்தான், மத்திய சுகாதார அமைச்சகம், ஒரு மாதத்திற்கு முன்புகூட, இத்தகைய விளம்பரதாரர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தது. ஆனாலும் மத்திய அரசுக்கு இது முக்கியமான பிரச்சினையல்ல என்பதால், இதுகுறித்து மக்களே ஒரு போராட்டத்திற்கு ஆயத்தமாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கட்டாயங்கள் குறித்து இனி பார்ப்போம்.

மாரடைப்பு விளம்பரம்

தொலைக்காட்சிகளில், குறிப்பிட்ட ஒருவகை மாத்திரையை சாப்பிட்டால் நீரழிவு நோயில் இருந்து நோயாளி முற்றிலும் விடுபடலாம் என்ற விளம்பரம் நாள்தோறும் இன்னும் வந்து கொண்டுதான் இருக்கிறது. எனக்கு நெருங்கிய ஆன்மீகத் தோழர் ஒருவர், இதை நம்பி அந்த மாத்திரைகளை வாங்கி உட்கொண்டாார். இதனால் அவரது கல்லீரல் பலமடங்கு வீங்கி, இதயத்தைத் தாக்கி மாரடைப்பே வந்துவிட்டது. எப்படியோ தப் பித்துவிட்டார். இவரைப் போலவே இதேமாத்திரைகளை வாங்கி உட்கொண்ட ஒரு நெய்வேலி நண்பருக்கும் இவரைப்போன்ற நிலைமை ஏற்பட்டதாம். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் செத்தாரா பிழைத்தாரா என்பது தெரியவில்லை. அண்மையில், தோழர் வலம்புரிஜான் அவர்கள் நடத்திய எய்ட்ஸ் விழிப்புணர்வு கூட்டத்தில் இந்தத் தகவலை அந்த விளம்பரத்தின் பெயரைச் சொல்லியே அறிவித்தேன். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட எழுத்தாளர் அனுராதா ரமணன், தானும் இந்த மாத்திரையை சாப்பிடத் துவங்கி இருப்பதாகவும், நான் சொன்னது நல்லதாய் போயிற்று என்றும் நன்றியுடன் குறிப்பிட்டார். அனுராதா ரமணனுக்கு ஆயுள் கெட்டியாக ஆனதில் எனக்கு மகிழ்ச்சி.

வேலியே பயிரை மேயும் விளம்பரம்

இதைப்போல் இன்னொரு உடல்நல விளம்பரம். எய்ட்ஸ் நோயை முற்றிலும் குணப்படுத்திவிட லாம் என்று விளம்பரங்கள்