பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 சீர்வரிசை முகமூடிகள்

விட்டு, பொதுவாக கிராமப் பெண்களின் நிலைமையை எடுத்தால், இவர்களின் திருமணங்களில் வழங்கப்படும், வரதட்சணை என்பதும், நகைநட்டுகளும், குடும்ப சொத்தில் உரியபங்கு இவர்களுக்கு போய்ச்சேராமல் தடுப்பதற்காக கொடுக்கப்படும் இழப்புத்தொகையே. தென் மாவட்டங்களில் இதை ‘சுருள் என்று சொல்கிறார்கள் இப்போது வரதட்சணை தடுப்பு சட்டத்திற்குப் பயந்து அன்பளிப்பு என்கிறார்கள். பொதுவாகவே, ஒரு கிராமியக் குடும்பத்தில் ஆண்பிள்ளைதான் பரம்பரை சொத்துக்கு உரியவன் என்ற முறைமையே நிலவுகிறது. இப்படிச் சொல்வதால் நகரங்களில் இது நிலவவில்லை என்றும் பொருளாகாது) இந்த மனப்போக்கில்தான், ஆணும் பெண்ணும் வளர்க்கப்படுகிறார்கள். நமது அரசாங்க குடும்பநல விளம்பரத்தில்கூட ஒரு காலத்தில் ஆசைக்கு ஒரு பெண் ஆஸ்திக்கு ஒரு ஆண் என்ற வாசகமே மேலோங்கி நின்றது.

அம்மான் என்ற முறை வார்த்தை அண்மைக்காலம்வரை, பெண்களுக்கு, சொத்துக்குப் பதிலாக, அதற்குக் குறைவான சலுகைகள் வழங்கப்பட்டன. ஒரு சிறுமி பூப்பெய்தால், தாய்மாமன், சீர் செய்யவேண்டும். இந்தச்சீர், இந்த மாமன், இந்தப்பெண்ணின் அம்மாவான தனது சகோதரிக்கு சேரவேண்டிய சொத்துக்காக, இவனை அறியாமலேயே, இவன் கொடுக்கும் இழப்புத் தொகையாகும். இதேபோல் ஒரு பெண், திருமணமாகி புகுந்தவீடு சென்றாலும், ஆடிமாத அம்மன் கொடைகளிலும், தீபாவளி, பொங்கல் போன்ற திருநாட்களிலும், இவளுக்கும், இவள் கணவனுக்கும் பிறந்தவீடு, சீர் செய்வது மரபு. இந்தப் பெண்ணின் முதல் பிரசவம், தாய்வீட்டிலேயே நடைபெறும். பிறக்கிற பிள்ளைக்கு கையில் மோதிரமோ அல்லது வெள்ளி அரைஞாண்கயிறோ போடுவது ஒரு வழக்கம்.

தாய் இறந்த பிறகு, அவளது நகைகளும் மகள்களுக்கே போய்ச்சேரும். இவள்களின் பிள்ளைகளுக்கு, தாய்மாமன் வாழ்க்கை முழுவதும் ஏதாவது ஒன்றை செய்துகொண்டிருக்க வேண்டிய கட்டாய சமூகக் கடமை இருந்தது. இதனை முறைப்படுத்துவது மாதிரி, சகோதரி மகனின் ஜாதகம், தாய் மாமனுக்குத்தான் முதலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற மரபும் நிலை நாட்டப்பட்டது. தந்தையைவிட, தாய்மாமனே ஒரு பிள்ளைக்கு ஜாதக ரீதியில் பெரிதாகக் கருதப்பட்டிான். இதனால்தான், அம்மா என்ற பெண்பாலுக்கு, அம்மான் (தாய்மாமன் என்ற வார்த்தை ஏற்பட்டது. பழைய தலைமுறையினர் தாய்மாமன்களை அம்மான் என்றே அழைத்தார்கள். பிள்ளைகளின் தந்தைவழி பாட்டன், தாத்தா என்றும், பாட்டி, அய்யாமை என்றும் அழைக்கப் பட்டார்கள். ஆனால், தாய்வழி பாட்டன்