பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 37

எதுகை, மோனை, முரண்தொடை, இயைபு, அளபெடை, பொழிப்பு, செந்தொடை உள்ளிட்ட 13,669 தொண்டகளை எடுத் தாண்டு , தொல் காப்பியம், தனக்கு முன்னிருந்த இலக்கியங்களை வகைப்படுத்திய நூலாகும். இந்த வகைப் படுத்தல் கணிப்பொறி இல்லாத காலத்திலேயே சுவடிகளில் எழுதப்பட்டுள்ளது. இன்று பேசப்படும் இலக்கிய அமைப்பியலுக்கு வழிவகுப்பதும் தொல் காப்பியமே.

நமது தமிழ் முன்னோர்களின் ஐந்திணை ஒழுக்கம், எந்த மொழி இலக்கியத் தி லும் இல்லாதது. இத்தகைய தொல்காப்பியத்தையும், சங்க இலக்கியத்தையும், ஐம்பெரும் காவியங்களையும், பக்தி இலக்கியங்களையும் படிக்கவேண்டியது மெய்யான தமிழ் எழுத்தாளர்களின் கடமையாகும் இவற்றைப் படித்தால், நாம் இன்னும் சங்க இலக்கிய நாடகபாணி காதல் நிகழ்ச்சிகளை கவின்படத் தாண்டவில்லை என்பது புரியும்.

‘பெரியவர் என்று வியத்தலும் இலமே’ என்று பாடிய நம் முன்னோன் கணியன் பூங்குன்றனின் அன்றைய முழக்கம் இன்றைய தனிநபர் வழிபாட்டையும், சினிமாத்தனங்களையும் எழுத்தால் வீழ்த்துவதற்கு உதவும். அதோடு, சங்கக் காலத்திலேயே மென்மை ன காதலுக்கும் திணை ஒழுக்கத்திற்கும் தகுதியற்றவர்களாக கருதப்பட்ட கடைசியர்களை புரிந்து கொள்ளவும், நான் ஆழ்கடலில் பெரிய சுறாமீன்களை கூறுபோடும் பரதனின் மகள். உன்னைவிட சிறப்பான இளைஞர்கள் எம்குலத்திலும் உளரே என்று நற்றிணையில் காதலனை அதட்டிப் பேசிய ஒரு புரட்சிப் பெண்னை அடையாளம் காணவும் முடியும். தமிழை, ஆரவார முழக்கமாக்கி, பழமை மீட்பு வாதத்தில் ஈடுபடும் பத்நாம் பசலிகள் மீது இந்த ஞானத்தின் மூலம் உருவாகும் படைப்பிலக்கியத் தேரில் இருந்து அம்பிடமுடியும். எனவே, நமது பண்டைய இலக்கியங்களை படிக்க வேண்டியது ஒரு தமிழ் எழுத்தாளனின் கட்டாயக் கடமை.

கொடியும்-மொழியும்

பொதுவாக, ஒரு சிலரைத்தவிர, நமது தமிழ் கவிஞர்கள் தாய்மொழியான தமிழில் ஆழ்ந்த அறிவும் தீராத பக்தியும் கொண்டவர்கள். இதற்கு மாறாக இருப்பவர்கள் பிரபல எழுத்தாளர்களில் பெரும்பாலோர். இவர்களுக்கு மொழி என்பது ஒரு கருவியே. ஒரு இலக்கியக் கூட்டத்தில் ஒரு உலகளாவிய இதழாசிரியர் ஒருவர் மொழி நமது அடிமை, வேலைக்காரன் என்று கூட குறிப்பிட்டார். இது அடாவடித் தனமானது.